ஜனாதிபதி மாளிகைகளை பராமரிப்பதற்காக கடந்த ஒன்பது வருட காலத்தில் சுமார் 35 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொழும்பு கோட்டை, கண்டி, நுவரெலியா, கதிர்காமம், அனுராதபுரம், மஹியங்கனை மற்றும்…
2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் 5,523 சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். நேற்று (23/07) பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை…
பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தியும், தங்களைப் பொலிஸ் அதிகாரிகளாகப் போலியாக அடையாளப்படுத்தியும் சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் முறைப்பாடளிப்பதற்காகப் பொலிஸார் சில தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த மோசடிகள் தொடர்பில் இதற்கு முன்னரான சந்தர்ப்பங்களில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த…
உலக கண்டல் தாவர தினத்தை முன்னிட்டு மண்டைதீவு கண்டல் தாவர ஒதுக்கப்பகுதியில் இன்றையதினம் (24/07) கண்டல் தாவரங்கள் நடுகை செய்யும் நிகழ்வு இடம்பெற்றது. யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை பிதான வீதியின் ஓரமாக மண்டைதீவு கண்டல் தாவர ஒதுக்கப்பகுதியில் யாழ் மாவட்ட வன…
பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த இலங்கைத் தமிழரான உமா குமரன், தற்போது பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களில் பிரித்தானியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, புதிய பிரதமராக ஹன்டி பெர்கம் பதவியேற்றார்.…
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீரவி கிராம அலுவலர் பிரிவின், கல்லாறு பகுதியைச் சேர்ந்த மக்களின் ஒத்துழைப்புடன் குறித்த குற்றச் செயல் தடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் கல்லாறு கத்தோலிக்க தேவாலயத்திற்கு அருகில் நேற்று (23/07) இரவு 9.30 மணியளவில்…
யாழ்ப்பாணம், மருதனார்மடத்தில் அமைந்துள்ள வட இலங்கை சங்கீத சபைக்கு முன்பக்கமாக உள்ள வீதிக்கு, புகழ்பெற்ற வயலின் வித்துவான் லட்சுமி நாராயணாவின் பெயர் சூட்டப்பட்டு, அதற்கான பெயர்பலகை இன்று (23/07) திரைநீக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும்…
துறைமுக நகரில் வைத்து சீனப் பிரஜைகள் சிலரால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மற்றொரு சீனப் பிரஜையின் சடலம் எஹலியகொடை - கரந்தனை காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இன்று (23/07) அதிகாலை கொழும்பு கோட்டை துறைமுக நகருக்கு மீன்பிடிப்பதற்காக…
புலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ள பரீட்சார்த்திகளின் வருகை பதிவேடுகள் சம்பந்தப்பட்ட பாடசாலைகளினால் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் தகவல்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பின், இன்று (23) முதல் ஓகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி வரை…
திருகோணமலை மாவட்டத்தின் கன்னியா பகுதியில் இன்று (22/07) காலை தொல்பொருள் திணைக்களத்தினால் புதிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், கன்னியா பகுதி தொடர்பில் 2020 ஆம்…
கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி அருட்சகோதரிகள் பயணித்த வாகனம், இன்று (22/07) அதிகாலை பறையநாளங்குளம் இரும்புப் பாலத்தில் விபத்துக்குள்ளானது. இவ்விபத்தின் போது வாகனத்தில் பயணித்த நான்கு அருட்சகோதரிகள் காயமடைந்த நிலையில், உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒரு…
கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அரச வைத்தியசாலை ஒன்றின் சுகாதார உதவியாளர் ஒருவருக்கு,வடமத்திய மாகாண மேல் நீதிமன்றம் இன்று (22/07) மரண தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பை அறிவித்த மேல்…
சர்வதேச மேற்பார்வையின் தங்கத் தரநிலையை ஏற்றுக்கொள்ளாமலேயே, சவூதி அரேபியா தனது சிவில் அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருளைத் தானே செறிவூட்டுவதற்கு வழிவகுக்கும் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அனுமதி அளித்துள்ளதாக தகவல்களை சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன இந்த…
இலங்கை கடவுச்சீட்டின் தரவரிசை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான Henley Passport Index தரவரிசைப்படி, உலக நாடுகளில் இலங்கை 94ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கை கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள், விசா இல்லாமல் அல்லது சென்ற இடத்திலேயே…
வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறையை பயன்படுத்தி மோசடியான முறையில் வாகன இறக்குமதி செய்த குற்றச்சாட்டொன்றை முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் புதல்வர்கள் எதிர்கொண்டுள்ளனர். வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறை…
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் உடனடி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் இன்று (22/07) காலை செம்மணி வளைவு பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காலை 8.00 மணியளவில்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account