தொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்ட தொழிற்சாலை பரிசோதனை பொறியியலாளர் அலுவலகம் நடாத்திய “தீ பாதுகாப்பு மற்றும் வெப்ப அழுத்தம்” தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி நிகழ்வு இன்று (16/11/2026) காலை 9.30 மணி தொடக்கம் பி.ப 2.00 மணிவரை சிறப்பாக இடம்பெற்றது.

தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யாழ் மாவட்ட தொழிற்சாலை பரிசோதனை பொறியியலாளர் அலுவலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது

யாழ் மாவட்ட தொழிற்சாலை பரிசோதனை பொறியியலாளர் ஆ.அபிராஜ் மற்றும் விசேட தொழிற்சாலை பரிசோதனை பொறியியலாளர் எஸ்.டி. டிசநாயகே ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கியிருந்தனர்
இந் நிகழ்வில் வடமாகாணத்தில் உள்ள தொழிற்சாலைகளைச் சேர்ந்த அழைக்கப்பட்ட சுமார் 50 தொழிலாளர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.