ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (16/11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, நாட்டின் தற்போதைய வெப்பநிலை மற்றும் அதிக மழைவீழ்ச்சி தொடர்பான காலநிலை முன்னறிவிப்புகள் ஆராயப்பட்டதுடன், அவற்றினால் ஏற்படக்கூடிய சமூகப் பாதிப்புகள் குறித்து விரிவான அறிக்கையொன்றைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
மேலும், குடிநீர், மின்சாரம், உணவு விநியோகம் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பு தொடர்பான சவால்களை எதிர்கொள்ள நிலைபேறான திட்டங்களைப் புதுப்பிக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.
குறித்த கலந்துரையாடலில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் உள்ளிட்ட பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் வளிமண்டலவியல் திணைக்களங்களின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.