பாடசாலையிலிருந்து மகளை அழைத்து சென்ற தந்தை ரயிலுடன் மோதி உயிரிழப்பு!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பாடசாலை முடிவடைந்த பின்னர் தனது மகளை மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு அழைத்துச் சென்ற தந்தை, ரயிலுடன் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இன்று (23.09) நண்பகல் யாழ்ப்பாணம் அரியாலை புங்கங்குளம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆராய்ச்சிப் பணியில் பணியாற்றி வந்த நாகராசா சூரியகுமார் என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அரியாலை புங்கங்குளம் ரயில்வே கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்டபோது, அவ்வழியாகச் சென்ற ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், அவரது மகளான பாடசாலை மாணவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாகராசா சூரியகுமாரின் அகால மறைவுக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

தமது கடமைகளை மிகுந்த அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் ஆற்றிவந்த அவர், சக உத்தியோகத்தர்களின் அன்பையும் மதிப்பையும் பெற்ற சிறந்த பணியாளராகத் திகழ்ந்தார் என்பதுடன்

அவரது மறைவு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என மாவட்ட செயலகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Share this Article
Leave a comment