பிணையில் விடுவிக்கப்பட்ட வெடுக்குநாறிமலை ஆலய பூசாரியும், முன்னாள் தலைவரும்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆலயத்தின் பூசாரி அ.மதிமுகராசா, மற்றும் ஆலயத்தின் முன்னாள் செயலாளர் து.தமிழ்ச்செல்வன், முன்னாள் தலைவர் செ.சசிகுமார் ஆகியோரை இன்றையதினம் (16/11) வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்புக்கட்டளை வழங்கப்பட்டிருந்தது.

கடந்த 2020 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு தொடர்பாகவே குறித்த கட்டளை  வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அந்தவகையில் ஆலயத்தின் பூசாரியும்,முன்னாள் தலைவரும் இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

அவர்களை பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்கள் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி தி.திருவருள் முன்னிலையாகியிருந்தார்.

இதேவேளை ஆலயத்தின் முன்னாள் செயலாளரான து.தமிழ்ச்செல்வன்  வெளிநாடொன்றில் வசித்து வருகின்றமையால் இன்றையதினம் மன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article
Leave a comment