நெடுந்தீவு உதைப்பந்தாட்ட குழுமத்தின் 2026 ஆம் வருடத்துக்கான உதைபந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (25/09) பி. ப 2.00 மணிக்கு நெடுந்தீவு மகாவித்தியாலய மைதானத்தில் ஆரம்பமாகி 27.09.2026 வரை 03 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன் இப்போட்டித் தொடரில் 06 அணிகள் கலந்துகொள்கின்றன.

ஏல முறையில் வீரர்கள் உள்வாங்கப்பட்டு இடம்பெறும் இப் போட்டியில்
முதலிடம் பெறும் அணிக்கு ரூ.220,000.00
இரண்டாமிடம் பெறும் அணிக்கு ரூ.170,000.00
மூன்றாம் இடம் பெறுவோருக்கு ரூ.120,000.00 பணப் பரிசிலும் வெற்றி கிண்ணங்களும் வழங்கப்படவுள்ளது

ஒவ்வொரு போட்டிகுமான சிறந்த வீரருக்கான பணப்பரிசினை ஸ்ரார் விளையாட்டு கழக உறுப்பினர் வே.ராஜா(கனடா) அவர்களும் இறுதி போட்டிக்குரிய சிறந்த விளையாட்டு வீரர்களுக்குரிய கிண்ணங்களை சென்ஜோன்ஸ் விளையாட்டு கழக உறுப்பினர் நியாஸ் (பிரான்ஸ் ) அவர்களும். முதலிடம் பெறும் அணிக்கான அமரர் சகாயசதீஸ்வரன் வெற்றி கிண்ணத்தை அவரின் சகோதரர் தோ.எடிசன் அவர்களும். வழங்குவதுடன், போட்டிக்களுக்கான ஒலியமைப்பு அனுசரணையினை உதயசூரியன் விளையாட்டு கழக உறுப்பினர் அ.கொன்சியஸ் அவர்களும் வழங்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்