குருநகர் களப்பு பகுதியில் 192 கிலோகிராம் கஞ்சாவுடன் கைது!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

குருநகர் களப்பு பகுதியில் இன்று (24/09) காலை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 192 கிலோகிராமுக்கும் அதிகமான கஞ்சாவை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

​வட கடற்படை கட்டளையின் எல்.என்.எஸ். வெலுசுமண கடற்படை முகாமின் கடற்படையினருக்கு கிடைத்த நம்பகமான தகவலின் பேரில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

​இதன்போது, சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று இடைமறிக்கப்பட்டு, 7 பைகளில்  88 பொதிகளாக அடைக்கப்பட்டிருந்த கஞ்சா, டிங்கி படகு என்பவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

​கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் டிங்கி படகு ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண பொலிஸ் பிரிவின் குற்றப்புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Share this Article
Leave a comment