வடக்கு கடற்பரப்பில் 989 கிலோகிராம் எடை கொண்ட உலர்ந்த மஞ்சள் பொதிகளும் இரண்டு டிங்கி படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்றுமுன்தினம் இரவு (ஜனவரி 19) குருநகர் மற்றும் மண்டைதீவு ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளதுடன்…
சூரியாவத்தை நாரந்தனை வீதிப் புனரமைப்பு நடவடிக்கை இன்றுடன் நிறைவுபெற்று மக்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. 2022 ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தின் முன்மொழியப்பட்ட ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இந்த வீதியே புனரமைப்புச் செய்யப்பட்டது.
அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலய மாணவர்கள் யாழ்ப்பாணத்துக்கு கல்விச் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டிருந்தனர். யாழ் இந்துக் கல்லூரியின் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை நேரடியாக தரிசிக்கவும் புதிய நுட்பங்களை அறிந்து கொள்ளும் வகையிலும் இந்தக் கல்விச் சுற்றுலாவை மேற்கொண்டிருந்தனர்.
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள நி லையில், பரீட்சையின் போது எந்தவொரு இலத்திரனியல் சாதனங்களை கொண்டு செல்வதோ அல்லது வைத்திருக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறினால் ஐந்தாண்டு காலத்துக்கு…
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் “சிஎன்என் டிராவலின்” பரிந்துரைப்படி, ஆசியாவிலேயே மிகவும் தரப்படுத்தப்படாத 18 இடங்களில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் தொடர்பாக விபரிக்கும் சிஎன்என் டிராவல் வழிகாட்டித்தளம், பெரும்பாலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் அழகிய தென் கடற்கரை அல்லது மத்திய…
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் அ.சிவபாலசுந்தரனை வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த குணரத்ன, யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத்ன மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட ஆகியோர்…
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணம் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியால் செலுத்தப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதிக் கட்டப் பணிகள் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில்…
அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயத்தில் வருடந்த தைப்பொங்கல் விழா வித்தியாலய அதிபர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயத்தின் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. வித்தியாலய அதிபர் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.
நெடுந்தீவு திரு இருதய முன்பள்ளிச் சிறார்களின் பொங்கல் விழா ஆசிரியர்களின் வழிகாட்டலுடன் சிறப்பாக நடைபெற்றது.
யாழ்ப்பாணம், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயன்மார்கட்டுக் குளத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் நேற்று (ஜனவரி 19) மீட்கப்பட்டுள்ளது. சடலத்தை அவதானித்த பொதுமக்கள் அது தொடர்பாக யாழப்பாணம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை மீட்டு…
யாழ்ப்பாணம், கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரிக்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகும் என்று பீடாதிபதி சுப்ரமணியம் பரமானந்தம் தெரிவித்தார். புதுமுக மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 29ஆம் திகதிவரையில் நடைபெறவுள்ளது. அதேவேளை,…
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்காலில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து துப்பாக்கிகள் நேற்றுமுன்தினம் (ஜனவரி 18) மீட்கப்பட்டுள்ளன. அந்தக் காணியில் கிணறு வெட்டியபோதே துப்பாக்கிகள் வெளித் தென்பட்டுள்ளன. இது தொடர்பாக மக்கள் பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்கிய தகவலையடுத்து சிறப்பு அதிரடிப் படையினர் சம்பவ…
2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலை வருடத்தின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (ஜனவரி 20) நிறைவடைகின்றது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று (ஜனவரி 20) ஆரம்பமாவதை அடுத்து, இன்று நாடு முழுவதும் உள்ள அரச…
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப் பணத்தை வைப்பிலிடுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று (ஜனவரி 20) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது. பல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ள நிலையில், உள்ளூராட்சிச் சபை தேர்தல் தொடர்பான வேட்பு…
நெடுந்தீவு சென் அன்ரனீஸ் முன்பள்ளியின் பொங்கல் நிகழ்வும் சிறுவர்களின் மாதிரிச் சந்தையும் இன்று (ஜனவரி19) நடத்தப்பட்டது. இந்த நிகழ்வுகள் முதல் முறையாக பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது.
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account