முட்டை பிரச்சினை தீராவிட்டால் சுதந்திர தினத்தில் சேவல் கூவும்! – அரசுக்கு எச்சரிக்கை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முட்டை பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காவிட்டால் சுதந்திர தின விழாவுக்கு சேவல், கோழிகளுடன் வரவுள்ளதாக அகில இலங்கை ஹொட்டல் உரிமையாளர்களின் சங்கத் தலைவர் அசேல சம்பத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று (ஜனவரி 28) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இந்த செய்தியாளர் மாநாட்டுக்கு நாட்டுக் கோழியொன்றையும் எடுத்து வந்துள்ளார்.

முட்டை பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைக்காவிட்டால் நாடு முழுவதுமுள்ள ஹொட்டல்கள் உணவு விடுதிகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

Share this Article