புங்குடுதீவு ஏழாம் வட்டாரப் பகுதியில், வீட்டிலிருந்து பிறிதொரு வீட்டுக்கு சட்டவிரோதமான முறையில் மின் இணைப்பை வழங்கிய நபர் கைது செய்யப்பட்டார் என்று ஊர்காவற்றுறைப் பொலிஸார் நேற்று (ஜனவரி 23) திங்கட்கிழமை தெரிவித்தனர். மின்சார சபைக்குச் சொந்தமான மின்மானியை சேதப்படுத்தி, வீட்டிலிருந்து நபரொருவர்…
பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் முன்பாக அநாவசியமாக நடமாடும் குழுக்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுஅமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. இது தொடர்பில் பொதுஅமைப்புகள் சில ஒன்றிணைந்து வலியுறுத்தியுள்ளதாவது, மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்துள்ளது. அதைக் கட்டுப்படுத்த…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் திருவுருவச்சிலை வலிதெற்கு பிரதேச சபைக்கு அருகாமையில் இன்று (ஜனவரி 24) திறந்துவைக்கப்பட்டது. மக்கள் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் திருவுருவச்சிலை வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் கருணாகரன் தர்சன் தலைமையில் திறக்கப்பட்டது.…
2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை இந்த மாதத்துக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்று பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனவரி 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர…
எதிர்காலத்தில் பாணின் விலையை குறைப்பது தொடர்பில் வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் ஆலோசித்து வருகிறது. தற்போது பாண் இறாத்தல் ஒன்று 170 முதல் 180 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பாணின் விற்பனை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. பல்வேறு வெதுப்பக உரிமையாளர்கள் விடுத்த…
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி இந்த வாரம் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பான தகவல்களை விரைவில் அனுப்ப வேண்டும் என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்களை…
போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் மல்லாகத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் மல்லாகம் ரயில் நிலையத்துக்கு அருகில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காங்கேசன்துறை விசேட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர் ஏழாலை…
யாழ். பல்கலைக் கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களாக 9 பேர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டுள்ளனர். பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களாகப் பதவி வகித்தவர்களின் பதவிக் காலம் கடந்த 15 ஆம் திகதியுடன் முடிவடைந்தது. அதையடுத்தே கடந்த 16 ஆம் திகதி முதல்…
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (ஜனவரி 23) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகின்றது. தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை இன்று நள்ளிரவுக்கு முன்னர் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல்கள்…
அரசமைப்பு பேரவை முதன்முறையாக நாளை (ஜனவரி 24) கூடவுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்குதல் போன்ற பல தீர்மானங்களை மேற்கொள்வதற்காகவே அரசமைப்புப் பேரவை கூடுகின்றது. நாளை காலை 9.30 மணிக்கு பேரவை கூடவுள்ளது என்று நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்தது. கலாநிதி பிரதாப்…
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக விவசாய பீடத்தின் கனகராயன் குளம் பிரதேசத்தில் உள்ள ஒருங்கிணைந்த பண்ணையில் இன்று (ஜனவரி 23) நெல் அறுவடை நிகழ்வு நடைபெற்றது. விவசாயப் பீடாதிபதி சீ.வசந்தரூபா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ். பல்கலைக் கழகப் பேராசிரியர் சி.ஸ்ரீசற்குணராஜா கலந்துகொண்டு…
இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நேற்று இரவு (ஜனவரி 22) தமிழகம் சென்றடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. கள்ளத்தோணி மூலம் நேற்று இரவு 10 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு சுமார் ஒரு மணிக்கு ராமேஸ்வரம் சேராங்கோட்டை கடற்கரைக்கு சென்றடைந்துள்ளதாக தகவல்கள்…
இலங்கைப் போக்குவரத்து சபைக்கு கடன் உதவித் திட்டத்தின் அடிப்படையில், இந்தியா 500 பஸ்களை வழங்கியுள்ளது. 32 இருக்கைகளை கொண்ட 500 பஸ்களை வழங்கியுள்ளது. 75 ஆவது சுதந்திரத் தினத்தை இலங்கை கொண்டாடவுள்ள நிலையில் கிராமங்களில் போக்குவரத்து வசதிகளைப் பலப்படுத்தும் நோக்கில் இந்த…
நடக்க இருக்கும் பிரதேசசபை தேர்தலில் 2023 தீவுப்பகுதியில் போட்டியிடும் நிராகரிக்கப்பட்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சிகள் பெயர் விவரங்கள். நெடுந்தீவு பிரதேசசபை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தமிழ்த்…
ஓய்வூதிய விண்ணப்பத்தை சரியான முறையில் அனுப்புவது தொடர்பாக அரச நிறுவனங்களின் விடய அலுவலர்களுக்கு விழிப்புணர்வூட்டும் விசேட நிகழ் நிலை பயிற்சித் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 25ஆம் திகதி இந்த நிகழ்நிலை பயிற்சித் திட்டம் நடைபெறவுள்ளது. அன்று காலை 9 மணி…
யாழ். மாவட்டத்தில் சில அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று யாழ்.மாவட்டச் செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று (ஜனவரி 21) இரவு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் அவர் இதனைத் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account