சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வருடாந்த ஒன்றுகூடல்!!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வருடாந்த ஒன்றுகூடல் மருத்துவர் பாலமுரளி தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரி மணிமனையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன் கலந்து சிறப்பித்தார்.

முதல்வர் தனது உரையில் யாழ்ப்பாணம் மாநகர மக்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வழங்கும் சுகாதார சேவைகளை பாராட்டி பேசியிருந்ததுடன், கொவிட் 19 உள்ளிட்ட அசாதாரண நிலைமைகளில் துணிச்சலாக எவ்வித பின்னடைவுகளுமின்றி சேவைகளை வழங்கிய அனைத்து உத்தியோகத்தர்களின் சேவைகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் மாநகர நிர்வாகத்துடன் இணைந்து வெற்றிகரமாக தங்களுடடைய சேவைகளை சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான உத்தியோகத்தர்கள் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வில் சிறப்பு உரைகளும், உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.

Share this Article