கடுமையான முறையில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்டிருந்த சுமார் நான்கு வயதுடைய சிறுமியொருவரை பொலிஸார் மீட்டுள்ளனர். இன்று (13/08) வத்தேகம - யடிராவண வீதியிலுள்ள பாழடைந்த பகுதியொன்றில் இருந்த போதே அச்சிறுமி இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். பொலிஸ் அவசர அழைப்பு…
சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளுடன் தொடர்புடைய 1,093 வெளிநாட்டவர்கள் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 'நாடே ஒன்றாக' தேசிய திட்டம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக இன்று (13/08) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பொலிஸ்…
இலங்கையில் உற்பத்தி செய்து இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு வரிவிலக்கு உள்ளதாக தென் இந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மதுரையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி…
தான் பெற்றுள்ள அதிகாரத்தை அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டுப் பயன்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று (12/08) பிற்பகல் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். "எனது நிறைவேற்று அதிகாரத்தையோ…
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புத் துறையின் வரலாற்றில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக, வசந்தி முருகேசு 'விமானநிலையம் மற்றும் விமானச் சேவைகள் தனியார் நிறுவனத்தின்' முதல் பெண் பாதுகாப்பு மார்ஷலாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை ஆண்கள் மாத்திரமே நியமிக்கப்பட்ட நிலையில் விமானநிலையப்…
இலங்கையிலுள்ள 146 அனுமதியற்ற சூதாட்ட இணையதளங்களை முடக்குமாறு அனைத்துத் தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது சட்டவிரோத இணையத்தள சூதாட்ட நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த இணையத்தளங்களை இலங்கைக்குள் பயன்படுத்துவதை முடக்குமாறு…
அம்பாலாந்தோட்டையிலுள்ள உயர்தரப் பரீட்சை மையமொன்றில், பரீட்சை வினாத்தாள் பெட்டியொன்றிலிருந்து நாளை (14/08) நடைபெறவிருந்த பெளதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 06 பொதிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு உடனடியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. எவ்வாறாயினும், அந்த வினாத்தாள்கள் அடங்கிய பொதிகள் திறக்கப்படவோ…
யாழ் அல்லைப்பிட்டியில் 17 வயது தமிழ் சிறுவன் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆறு மாதங்களுக்குப் பின்னர் இடம்பெற்ற வழக்கு விசாரணையில், சிறுவனின் குடும்பத்தினர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரியதைத்…
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (12/08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக வெற்றிகரமாக நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நீதிபதிகளின் ஓய்வூதிய வயதெல்லையை நீடிப்பது தொடர்பான 22 ஆவது அரசியலமைப்பு…
கிராமிய வீதி அபிவிருத்தியின் போது மாவட்டக் குழுக் கூட்டங்களில் சமர்ப்பிக்கப்படும் அவசர மக்கள் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து அப்பணிகளை நடைமுறைப்படுத்துமாறும், பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக 2022 ஆம் ஆண்டில் இடைநிறுத்தப்பட்ட அனைத்து வீதி அபிவிருத்தித் திட்டங்களையும் மீள ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி…
வெளிப்படைத்தன்மையான நீண்டகால முதலீடுகளுக்கு இலங்கையின் கதவுகள் எப்போதும் திறந்திருப்பதாகவும், மனித உரிமைகள் மற்றும் சுற்றாடலைப் பாதுகாக்கும் பொறுப்புமிக்க முதலீடுகளுக்கு அரசாங்கம் அதிகபட்ச ஆதரவை வழங்கும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் உலகளாவிய ஒப்பந்தம் மற்றும் இலங்கை…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதனை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். Truth Social தளத்தில் வெளியிட்ட பதிவில், அமெரிக்காவின் கடற்படை முற்றுகையைப் பாராட்டிய ட்ரம்ப், அதனை “எஃகு சுவர்” என…
வட்டி விகிதங்களை இந்த ஆண்டில் மேலும் உயர்த்த வேண்டிய அவசியமில்லை என இலங்கை மத்திய வங்கி கருதுவதாக மத்திய வங்கி ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான…
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (10/08) நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகிறது. எதிர்வரும் செப்டெம்பர் 05ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப்பரீட்சை, நாடு முழுவதும் 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு 264,496 பாடசாலைப்…
இலங்கைக்குக் கடல் வழியாகக் கடத்துவதற்காகப் பிரப்பன்வலசை கடற்கரைப்பகுதிக்கு வேனில் கொண்டுவரப்பட்ட 297 கிலோகிராம் கஞ்சா பொட்டலங்களை இன்று சனிக்கிழமை (08/08) இராமநாதபுரம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேனும்…
நீர்கொழும்பு - தளுபொத, பல்லன்சேனை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தையடுத்து, நீர்கொழும்பு பிரதான நீதவான் ஷிலானி பெரேரா சிறைச்சாலையைப் பார்வையிட்டுள்ளார். அத்துடன், நீர்கொழும்பு குற்ற விசாரணை அதிகாரிகள் சிறைச்சாலைக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதேவேளை, புதிய மெகசின் சிறைச்சாலையில்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account