மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறை !!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

14 வயது பாடசாலை மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட 49 வயதுடைய ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது

மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதியினால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் ஆசிரியைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, அவருக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 250,000 ரூபாய் வீதம், பாதிக்கப்பட்ட மாணவனுக்கு மொத்தமாக 750,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு, குறித்த மாணவனை பாடசாலையிலிருந்து தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பெண் ஆசிரியை மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

மொனராகலை, ஹிந்திகிவுல பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான குறித்த பெண் ஆசிரியைக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Share this Article
Leave a comment