எம்மால் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் தவறியதன் காரணமாக நேற்று (15/08) முதல் மறு அறிவித்தல் வரை சனிக்கிழமைகளில் கடமைகளிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் நெவில்…
ஜனாதிபதியுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நடத்திய கலந்துரையாடலின் முழுமையான தகவல்களையும் உடனடியாக ஊடகங்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார். ஜனசெத பெரமுன கட்சியின் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (14/08) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்…
கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திற்குச் சொந்தமான 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடநூல்களை 47,000 ரூபாய்க்கு வெளிநபர் ஒருவருக்கு விற்பனை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தலங்கம பொலிஸாரினால்…
நாட்டின் விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில்முனைவோர்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் குறித்து தற்போதைய அரசாங்கத்திற்கு எந்தவித அக்கறையும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். குருநாகல் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் அஜித் பிரியலாலின் 50…
ஈரானை தோற்கடித்த பிறகு, ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிரதேசமாக விரைவில் அறிவிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை ஈரானுக்குச் சொந்தமானது, அது ஈரானுக்குச் சொந்தமானதாகவே உள்ளது தொடர்ந்து ஈரானுக்கே சொந்தமானதாக…
இலங்கையின் பல பிரதேசங்களில் வறட்சியின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுத்தப்படுகின்றது. அத்தோடு, வறண்ட வானிலை காரணமாக, பிரதான மற்றும் சிறிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் மக்கள் மற்றும் விலங்கினங்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை…
கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் கிழக்கு மாகாண மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக வழங்கி வைக்கப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான பாடநூல்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பாடநூல் தொகுதியை ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி, அந்தப்…
EPF மற்றும் ETF ஆகியவற்றை ஒன்றிணைப்பதற்கும், ஊழியர் சேமநிதிச் சட்டத்தைத் திருத்துவதற்கும் அரசாங்கம் எடுத்துள்ள முடிவுக்குத் தனியார் ஊழியர் மையம் தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தொழில் அமைச்சரிடம் ஒரு கோரிக்கை மனுவைச் சமர்ப்பிப்பதற்காக, மையத்தின் பிரதிநிதிகள் குழு…
வாகன இறக்குமதி வரிகள் மீதான 50 சதவீத கூடுதல் கட்டணம் நீடிக்கப்பட்டுள்ளது. நாளை (15.08) வரை விதிக்கப்பட்டிருந்த இந்த 50% கூடுதல் கட்டணம் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நாளை முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி…
வீரகெட்டிய, அக்ரஹெர பகுதியில் இன்று (14/08) முற்பகல் துப்பாக்கிச் சூடு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர் வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காகத் தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். பன்றி…
கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடப்புத்தகங்கள் மற்றும் பயிற்சிப் புத்தகத் தொகுதி விநியோக மையங்களுக்கு உரிய முறையில் ஒப்படைக்கப்படவில்லை எனத் தலங்கம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் உயர் பெண் அதிகாரி…
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் அடங்கிய தொகுதியொன்றை இலங்கை கடற்படை மற்றும் பொலிஸாரும் இணைந்து கைப்பற்றியுள்ளனர். நுரைச்சோலையின் பனையடி பகுதியில் நேற்று (13/08) முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்த பீடி இலை தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்போது…
2025 ஒக்டோபர் 30 முதல் 2026 ஓகஸ்ட் 12 வரையான காலப்பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த காலப்பகுதியில் 2,259 கிலோ 129 கிராம் ஹெரோயின், 2,653 கிலோ 245…
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் கட்டுநாயக்க விமான நிலைய உப பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (13/08)…
ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொட்டி என்ற விந்தனிய சூரியாரச்சி என்ற பெண் சந்தேகநபரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை…
2026 ஜூலை மாதத்திற்கான பெறப்பட்ட பெறுமதி சேர் வரியை (VAT) ஓகஸ்ட் 20 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. வரி செலுத்தத் தவறுதல் அல்லது தாமதித்து செலுத்துதலுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்தத்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account