பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கை மக்கள் தெரியாத நபர்களுக்கு தொலைபேசி இலக்கங்களை வழங்கி சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளார்.

பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டு பொலிஸார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் உங்களுக்கு தெரியாத நபர்களோ அல்லது அறிமுகமில்லாதவர்களோ உங்களிடம் தொலைபேசி எண்ணைக் கேட்டால், ஒருபோதும் அதனை வழங்க வேண்டாம்.

உங்கள் தொலைபேசி எண் மற்றும் ஏனைய தனிப்பட்ட தகவல்களை நண்பர்களுக்கு மட்டுமே தெரியக்கூடியவாறு மாற்றிக் கொள்ளுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் உங்கள் தனிப்பட்ட தகவல்களையோ அல்லது தொலைபேசி இலக்கங்களை கோரினால் இந்த தொடர்பை உடனடியாக முடக்க வேண்டும்.

அத்துடன் அந்த நபர்கள் தொடர்பில் உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Share this Article
Leave a comment