குமுழமுனை மகாவித்தியாலய நுழைவாயில் திறப்பு விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முல்லைத்தீவு மாவட்ட குமுழமுனை மகாவித்தியாலயத்தின் நுழைவாயில் மற்றும் நுழைவாயிற்கதவு திறப்பு விழா நிகழ்வு நேற்றுமுன்தினம் (ஜனவரி 31) இடம்பெற்றது.

குமுழமுனை மகாவித்தியாலய அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மேலதிக மாவட்ட செயலர் க.கனகேஸ்வரனால் நுழைவாயில் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் லிசோ கேகிதா, முல்லைத்தீவு வலையக்கல்விப் பணிப்பாளர் இ.தமிழ்மாறன், கரைதுறைப்பற்று கோட்டக் கல்விப்பணிப்பாளர் த.ஸ்ரீபுஸ்பநாதன், உதவிக் கல்விப்பணிப்பாளர் த.புஸ்பகாந்தன் (கணிதம் ), பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் கிராம அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Share this Article