அதிகாலை வீடு புகுந்தவர்கள் கத்திமுனையில் பல லட்சங்கள் கொள்ளை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பருத்தித்துறை, திக்கம் பிரதேசத்தில் அதிகாலையில் வீடு புகுந்த கொள்ளையர்கள் கத்தி முனையில் அச்சுறுத்தி நகைகள், பணம் என்பவற்றைக் கொள்ளையிட்டுள்ளனர்.

இன்று (ஜனவரி 31) அதிகாலை இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.

அதிகாலை 2.30 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களைக் கத்தி முனையில் வைத்து அச்சுறுத்தியுள்ளனர்.

வீட்டில் இருந்த 5 லட்சம் ரூபா பணம் மற்றும் 20 பவுண் நகைகளைக் கொள்ளையிட்டுக் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் பருத்தித்துறைப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Share this Article