அகில இலங்கை சைவப் புலவர் சங்கத்தின் வைரவிழாவும் பட்டமளிப்பு விழாவும்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

அகில இலங்கை சைவப் புலவர் சங்கம் நடாத்திய வைரவிழாவும் பட்டமளிப்பு விழாவும் சாவகச்சேரியில் இன்று (ஜனவரி 1) இடம்பெற்றது.

அகில இலங்கை சைவப் புலவர் சங்கத்தின் தலைவர் சி.கா கமலநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்,
யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா கலந்துகொண்டு இளம் சைவபுலவர்களுக்கான சான்றிதழ்களையும், சைவப் புலவர்களுக்கான சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் சிறிலசிறி சோமசுந்தர ஞானசம்மந்த பரமாச்சாரிய சுவாமிகள், சறீமத் மீனாட்சி சுந்தர தம்பிரான் சுவாமிகள், சிறீவேதவித்தியா சாகரர், தென்மராட்சி வலைக்கல்வி பணிப்பாளர் த.கிருபாகரன், கலாநிதி முகுந்தன் மற்றும் கலாநிதி.பொ.சந்திரசேகரம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Share this Article