அதிகாலை வீடு புகுந்தவர்கள் கத்திமுனையில் பல லட்சங்கள் கொள்ளை!

பருத்தித்துறை, திக்கம் பிரதேசத்தில் அதிகாலையில் வீடு புகுந்த கொள்ளையர்கள் கத்தி முனையில் அச்சுறுத்தி நகைகள், பணம் என்பவற்றைக் கொள்ளையிட்டுள்ளனர். இன்று (ஜனவரி 31) அதிகாலை இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. அதிகாலை 2.30 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களைக்…

Anarkali Anarkali

கல்வியங்காட்டில் வாள்களுடன் கடைக்குள் புகுந்து கொள்ளை! – மூவர் கைது!

யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் கடை ஒன்றுக்குள் புகுந்து வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியதுடன், 5 லட்சம் ரூபாவைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த ஜனவரி மாத நடுப்பகுதியில் நடந்துள்ளது. யாழ்ப்பாணம், கல்வியங்காடு மற்றும் கோப்பாயைச் சேர்ந்த 29,…

Anarkali Anarkali

புங்குடுதீவு கொம்மாபிட்டி அறநெறி மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள்!!

புங்குடுதீவு இறுப்பிட்டி கொம்மாபிட்டி ஆலயத்தின் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன. வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மாலைப்பூசையின் போது மாணவர்களுக்கான கூட்டுப் பிரார்த்தனையும் நடத்தப்பட்டு வருகின்றது.

Anarkali Anarkali

ரணிலுக்கு எதிராக போராட்டம் – வழக்கு 28 ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பு!

யாழ்பபாணம் வந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று ( ஜனவரி 31) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஜனவரி…

Anarkali Anarkali

சமூக பாதுகாப்புச் சபை அடைவு மட்டத்தை வேலணைப் பிரதேச செயலகம்!

2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் அடைவு மட்டத்தை வேலணைப் பிரதேச செயலகம் அடைந்துள்ளது. இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (ஜனவரி 30) நடைபெற்றது. சமூக பாதுகாப்புச்…

Anarkali Anarkali

சுதந்திர தினத்தை முன்னிட்டு துவிச்சக்கர வண்டிப் பயணம்!!

இலங்கையின் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை துவிச்சக்கர வண்டி சம்மேளத்தினால், துவிச்சக்கர வண்டிப் பயணம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை முனைப் பகுதியிலிருந்து தெய்வேந்திர முனைப் பகுதி வரையில் பயணிக்கவுள்ள இந்த துவிச்சக்கர வண்டிப் பயணம் இன்றைய தினம்…

Anarkali Anarkali

இ.போ.ச பேரூந்தும் தனியார் பேரூந்தும் மோதி விபத்து!

சாவகச்சேரி நுணாவில் ஏ-9 வீதியில் இலங்கைப் போக்குவரத்து பேரூந்தும், தனியார் பேரூந்தும் மோதி இன்று பிற்பகல் (ஜனவரி 31) விபத்துக்குள்ளாகியுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த இ.போ.ச பேரூந்து முன்னால் சென்ற வாகனத்தை முந்த முற்பட்ட போது எதிர்த் திசையில் வந்த…

Anarkali Anarkali

யாழில் வைகறை நிகழ்ச்சித் திட்டக் கலந்துரையாடல்!!

சமூகத்தில் நலிவடைந்தவர்களை வலுப்படுத்துவதற்கான வைகறை நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று காலை( ஜனவரி 31) இடம்பெற்றது. யாழ் மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் இந்த நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ் மாவட்ட மட்டத்தில் கடந்த ஆண்டு…

Anarkali Anarkali

கடலில் மாயமான 15 வயதுச் சிறுவன் சடலமாக மீட்பு!

வடமராட்சி கிழக்கு, மாமுனைக் கடலில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவன் இன்று (ஜனவரி 31) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நாகர்கோயில் வடக்கைச் சேர்ந்த நந்தகுமாரன் திருமுருகன் என்ற 15 வயதுச் சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 29ஆம் திகதி மாமுனைக் கடலில் நீராடிய…

Anarkali Anarkali

இந்தியாவில் சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!

எல்லைதாண்டிய குற்றச்சாட்டில் இந்தியச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று (ஜனவரி 31) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்து அவர்கள் தங்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். கடற்றொழில் அமைச்சில் இந்தச்…

Anarkali Anarkali

பெப்ரவரி 20ஆம் திகதி தபால் மூல வாக்கெடுப்பு ஆரம்பம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் கடந்த 23ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்தன. தபால் மூல வாக்களிப்புக்கு…

Anarkali Anarkali

வேலணையில் கைத்தொழில் துறையின் விற்பனையும் கண்காட்சியும்!

வேலணை பிரதேச செயலக பழைய மாநாட்டு மண்டபத்தில் வடமாகாண தொழிற்றுறை திணைக்களம் மற்றும் கைத்தொழில் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட விற்பனையும் கண்காட்சியும் நேற்று (ஜனவரி 30) இடம்பெற்றது.

Anarkali Anarkali

இறுப்பிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் ஆலய மணவாளக்கோல விழா

யாழ்ப்பாணம், இறுப்பிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேக தின மணவாளக்கோல விழா கடந்த வாரம் சிறப்பாக நடைபெற்றது.  

Anarkali Anarkali

ஊடகவியலாளர் நிபோஜன் விபத்தில் உயிரிழப்பு!

கிளிநொச்சி ஊடகவியலாளரான எஸ்.என் நிபோஜன் கொழும்பில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். கொழும்பு தெஹிவளை பகுதியில் இன்று (ஜனவரி 30) திங்கட்கிழமை இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். சடலம் அங்கிருந்து மீட்கப்பட்டு கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி…

Anarkali Anarkali

நெடுந்தீவுக் கல்விக் கோட்டத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தோர் விவரம்!

நெடுந்தீவு கல்விக்கோட்டத்தில் 2022 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்தோர் விபரம் செபஸ்ரியான்விமலதாஸ் அன்ரூ கிஷானா - 165 நெடுந்தீவு மாவிலித்துறை றோ.க.வித்தியாலயம். அல்டின்றோய் லாறன்ஸ்றோய் - 161 நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூரி தேவசுதன்…

Anarkali Anarkali

புங்குடுதீவு ஹரிஹரபுத்திர ஐயனார் ஆலய அலங்கார உற்சவம் ஆரம்பம்!

புங்குடுதீவு ஸ்ரீ ஹரிஹரபுத்திர ஐயனார் ஆலய அலங்கார உற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. வருஷாபிஷேகம் எதிர்வரும் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

Anarkali Anarkali