தமிழ் அரசியல் கைதிகள் மூவர் பொதுமன்னிப்பில் இன்று (பெப்ரவரி 2) விடுவிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் ஒருவர் இன்னும் இரு மாதங்களில் தண்டனைக்காலம் முடிந்து விடுதலையாகவிருந்தவர்கள். மற்றையவர் மேன்முறையீடு செய்துள்ள நிலையில், அது இரத்துச் செய்யப்பட்ட பின்னரே சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது. 2009…
வடக்கில் காணிகளை விடுவிக்கவேண்டாம் என்ற மகாநாயக்கர்களின் எதிர்ப்பையும் மீறி வலி. வடக்கில் 108 ஏக்கர் காணி நாளை (பெப்ரவரி 2) பாதுகாப்புத் தரப்பால் யாழ். மாவட்டச் செயலகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது. பலாலி அன்ரனிபுரத்தில் இதற்கான நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இராணுவத்தினரிடமிருந்து காங்கேசன்துறை மத்தியில் (ஜே/234)…
யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களாக புதிதாக 14 பேர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் யாழ். மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் மற்றும் யாழ். மறைமாவட்டக்குருவும் வாழ்நாள் பேராசிரியருமான அருட்தந்தை பிலேந்திரன் அவர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள். பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களாகப்…
கச்சதீவு புனித அந்தோனியார் கோயில் திருவிழாவுக்கு தமிழகத்திலிருந்து இந்தமுறை 2 ஆயிரத்து 500 நபர்கள் வருவார்கள் என்று வேர்கோடு பங்குத்தந்தை தேவசகாயம் தெரிவித்துள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் கோயில் திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம், 4 ஆம் திகதிகளில்…
முல்லைத்தீவு மாவட்ட குமுழமுனை மகாவித்தியாலயத்தின் நுழைவாயில் மற்றும் நுழைவாயிற்கதவு திறப்பு விழா நிகழ்வு நேற்றுமுன்தினம் (ஜனவரி 31) இடம்பெற்றது. குமுழமுனை மகாவித்தியாலய அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மேலதிக மாவட்ட செயலர் க.கனகேஸ்வரனால் நுழைவாயில் திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில்…
யாழ்ப்பாண மாவட்ட சாரணர் ஆணையாளராக மேலதிக மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று (பெப்ரவரி 1) பி.ப 4.30 மணிக்கு இடம்பெற்றது.
கல்வியங்காட்டில் கடை ஒன்றுக்குள் வாள்களுடன் புகுந்து தாக்குதல் நடத்தி 5 லட்சம் ரூபா கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் நேற்று (பெப்ரவரி 1) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப்…
இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பெற்றோலின் விலையை அதிகரித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பு நேற்று நள்ளிரவு (ஜனவரி 1) முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 92 ரகப் பெற்றோலின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் பெற்றோலின் புதிய…
ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனைத் துறைமுகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் தாங்குமிட கூரையின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதால் பயணிகள் பெரும் சிரமங்களுக்குள்ளாகின்றனர். அத் துறைமுகம் ஊடாக பயணம் செய்யும் எழுவைதீவு, அனலைதீவுப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தற்போதைய மழை காரணமாக பெரும் சிரமங்களுக்குள்ளாகின்றனர். படகு…
யாழ்ப்பாணம் மாநகர சபைக்காக அமைக்கப்பட்டுவரும் புதிய கட்டடத்தை முழுமைப்படுத்திய பின்னரே ஒப்படைக்க வேண்டும் என்று யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் தெரிவித்தார். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கும் - யாழ்.மாநகர சபை முதல்வருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கடந்த 27ஆம்…
அகில இலங்கை சைவப் புலவர் சங்கம் நடாத்திய வைரவிழாவும் பட்டமளிப்பு விழாவும் சாவகச்சேரியில் இன்று (ஜனவரி 1) இடம்பெற்றது. அகில இலங்கை சைவப் புலவர் சங்கத்தின் தலைவர் சி.கா கமலநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர்…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியவில்லை. குருதி வங்கியில் குருதி வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. குருதி வழங்கி நான்கு மாதங்கள் பூர்த்தியான குருதிக்கொடையாளர்களும் புதிதாக குருதிக்கொடை வழங்கக் கூடிய கொடையாளர்களும் யாழ் போதனா வைத்தியசாலை குருதி வங்கிக்கு…
மானிப்பாய், உடுவிலில் சாரதியை அச்சுறுத்தி லொறி ஒன்றைத் திருடிச் சென்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சாரதி லொறியை நிறுத்திவிட்டு தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த சிலர் சாரதியை அச்சுறுத்தி…
அல்லைப்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள மென்போர்ட் சர்வதேசப் பாடசாலை திறப்பு விழா நேற்று 31 ஆம் திகதி செவ்வாய்கிழமை பாடசாலை முதல்வர் அருட்சகோதரர் மரியப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. யாழ். மறை மாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் பிரதம விருந்தினராக நிகழ்வில்…
75 ஆவது சுதந்திர தினத்துக்காக கொழும்பு காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மேடை உட்பட ஏனைய முக்கிய இடங்களை வீடியோவில் பதிவு செய்து கொண்டிருந்த காலி முகத்திடல் போராட்ட செயற்பாட்டாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். காலி முகத்திடலில்…
நெடுந்தீவு பிரதேச இளைஞர்கழக சம்மேளனம் நடாத்தும் தமிழர் பண்பாட்டு விழா இந்த மாதம் எதிர்வரும் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. மாட்டுவண்டி சவாரி, குதிரைச் சவாரி, கிளித் தட்டு, நீச்சல் போட்டி, மரதன், சைக்கிள் ஓட்டம், கிராமிய விளையாட்டுக்கள், சிறுவர்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account