இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அதிமேதகு அகியோ இசொமாட்டா அவர்கள், தமது தூதுக்குழுவினருடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றிருந்தார் யாழ்ப்பாணத்தின் விமானப் போக்குவரத்து, சுற்றுலா, பொருளாதார வளர்ச்சி மற்றும் சர்வதேசத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதில் இவ்வாறான இராஜதந்திரத் தொடர்புகளும் ஒத்துழைப்புகளும் முக்கியமானவை.…
எதிர்வரும் 2029 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச அல்லது, நாமல் ராஜபக்சவே நிச்சயமாக நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார். மாறாக, தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மீண்டும் ஒருமுறை அதிகாரத்திற்கு வரமாட்டார் என்று முன்னாள்…
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவர் திருந்தி வாழ சந்தர்ப்பமொன்றை வழங்குமாறு யாழ் மாவட்ட சர்வமத பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணம் நாக விகாரையில் புதன்கிழமை (23/09) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது சர்வமத தலைவர்கள்…
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தேசிய வாரம் ஒன்றை பிரகடனப்படுத்தியுள்ளது. நாளை முதல் (25/09) முதல் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரை இம்முறை உலக சிறுவர் தினக் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு…
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை மறுஅறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையானது நாளை (25/09) இந்தியாவில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடியில்…
சவுதியில் உள்ள அனோஜன் பதிவிட்ட கருத்திற்காக அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கையை சவுதி அரசாங்கத்திடம் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கின்றோம் என மன்னாரில் இன்று (24/09) மாலை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு…
குருநகர் களப்பு பகுதியில் இன்று (24/09) காலை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 192 கிலோகிராமுக்கும் அதிகமான கஞ்சாவை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். வட கடற்படை கட்டளையின் எல்.என்.எஸ். வெலுசுமண கடற்படை முகாமின் கடற்படையினருக்கு கிடைத்த நம்பகமான தகவலின் பேரில் இந்த…
இலங்கையின் கூரை மீதான சூரிய மின் உற்பத்தித் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சுட்டிக்காட்டி, இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது. 'இலங்கையின் கூரை மீது சூரிய மின் உற்பத்தித் துறைக்கு ஏற்பட்டுள்ள…
அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பள்ளை பகுதியில் நேற்று (22/09) மாலை இடம்பெற்ற விபத்தில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயிலும் 26 வயதுடைய திருமணமான மாணவி உயிரிழந்துள்ளார். நிந்தவூர் 9 ஆம் பிரிவு மையவாடி வீதியைச் சேர்ந்த…
வடக்கு மாகாணத்திலும் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சில ஜப்பானிய முதலீட்டாளர்கள் ஆர்வம் கொண்டுள்ளதாகவும், அவர்கள் இலங்கையின் தற்போதைய நிலைமைகளையும் வடக்கு மாகாணத்தின் சூழலையும் அவதானித்து வருவதாகவும் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகியோ ஐசோமாதா, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் தெரிவித்தார். வடக்கு மாகாணத்துக்குப்…
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் பயணிகள் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்தாலும், அந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள இரு பிரிவினர் குறித்து பொலிஸ் தெளிவுபடுத்தியுள்ளது. 'தெரண பிக் ஃபோகஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மோட்டார் போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்பு…
பாடசாலை முடிவடைந்த பின்னர் தனது மகளை மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு அழைத்துச் சென்ற தந்தை, ரயிலுடன் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இன்று (23.09) நண்பகல் யாழ்ப்பாணம் அரியாலை புங்கங்குளம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆராய்ச்சிப்…
உலகளாவிய பயணச் சுதந்திரத்தை அளவிடும் தரவரிசையில் இலங்கையின் கடவுச்சீட்டு 169ஆவது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கடவுச்சீட்டுகளின் வலிமை மற்றும் விசா அணுகல் தொடர்பான தகவல்களை கண்காணிக்கும் சுயாதீன தளமான பாஸ்போர்ட் ரிப்போர்ட்ஸ் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இந்தத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.…
கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சுகுணனுக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் இடம்பெற்ற ஹிஜாப் விவகாரம் தொடர்பாகவும், அவருக்கு எதிராக வெளியிடப்பட்ட அவதூறான மற்றும் சமூக மோதலைத் தூண்டும் கருத்துகளுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்ட இணையவழிப் பாதுகாப்புச்…
இலங்கையில் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்காக 50 இலட்சம் முன் அச்சிடப்பட்ட பொலிகார்பனேட் அட்டைகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் ஜெர்மனியின் M/s Muhlbauer ID Services GmbH நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 4.93 மில்லியன் யூரோ பெறுமதியான இந்த ஒப்பந்தத்தின் கீழ், குறித்த…
நாட்டில் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் நாடு தழுவிய ரீதியில் விசேட அதிரடி சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விசேட அதிரடி சோதனையில் 27,696 நபர்கள் அதிரடி சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், 455 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account