மோசடி வழக்குகளில் சிக்கவுள்ள மகிந்தவின் புதல்வர்கள்!!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறையை பயன்படுத்தி மோசடியான முறையில் வாகன இறக்குமதி செய்த குற்றச்சாட்டொன்றை முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் புதல்வர்கள் எதிர்கொண்டுள்ளனர்.

வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறை மூலம் அரசாங்கத்திற்கு 2.4 பில்லியன் ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயகொடி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்த பாரிய அளவிலான முறைகேடுகள் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பதவிக்காலத்தில் நிகழ்ந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட இந்ருவன்திலக ஜயகொடிதத் திட்டத்தின் கீழ், 640 வாகனங்களை இறக்குமதி செய்ய இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே சிறப்புரிமைகள் வழங்கப்பட்டதாக, பிரதம கணக்காய்வாளரின் அறிக்கைகளை மேற்கோள் காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த செயல்முறை தொடர்பான சரியான தகவல்கள் பிரதம கணக்காய்வாளருக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடு செல்லாத நான்கு நபர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டது, விண்ணப்பத்தில் தொழில் குறிப்பிடப்படாத 60 நபர்களுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டது, சிலருக்கு இரண்டு வீதம் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டது மற்றும் 4 மாதங்கள் போன்ற மிக குறுகிய காலத்திற்கு வெளிநாடு சென்று திரும்பிய நபர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்பட்டது போன்ற பல ஊழல்களை நாடாளுமன்ற உறுப்பினர் சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தார்.

எந்தவொரு அறிவியல் அடிப்படையுமின்றி சொகுசு வாகனங்களுக்கான 6 மில்லியனிலிருந்து 12 மில்லியன் ரூபாவாக வரி வரம்பு உயர்த்தப்பட்டதால், அரசாங்கத்திற்கு 2.4 பில்லியன் ரூபா வரி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயகொடி குற்றம்சாட்டிள்ளார்.

இது இந்த நாட்டின் வரி செலுத்தும் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டதற்கு சமம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அனுமதிப்பத்திர முறையைத் தவறாகப் பயன்படுத்தி, ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த யோஷித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஆகியோரும் இரண்டு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

CAB 7373 மற்றும் CAB 7171 ஆகிய எண்களைக் கொண்ட வாகனங்கள் இந்த முறையில் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், அவ்வாறாக பாரிய அளவிலான நிதி மோசடியில் ஈடுபட்ட அனைவர் மீதும் உடனடியாக சட்டம் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Share this Article
Leave a comment