கைத்தொழில்கள் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க அவர்கள், பரந்தன் இரசாயன தொழிற்சாலையின் நடைபெற்று வரும் அபிவிருத்திப் பணிகளை நேரில் பார்வையிட்டார்.

இது தொடர்பிலான பதிவில் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் …
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன, மத, பிரதேச வேறுபாடுகள் இன்றி நாட்டின் அனைத்து பகுதிகளையும் சமமாக அபிவிருத்தி செய்யும் கொள்கையுடன் செயற்பட்டு வருகிறது. நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்ட வடக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தொழில்துறை, உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, இந்த அபிவிருத்திப் பணிகள் எந்த வெளிநாட்டு நிதி உதவியையும் சார்ந்து அல்லாமல், எமது நாட்டின் மக்களின் வரிப்பணத்தை பொறுப்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பயன்படுத்தி முன்னெடுக்கப் கின்றன. இதுவே மக்கள் பணத்தை மீண்டும் மக்களின் நலனுக்காக பயன்படுத்தும் புதிய அரசியல் கலாச்சாரத்தின் வெளிப்பாடாகும்.
பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த திட்டங்கள் இன்று நடைமுறைக்கு வருவதன் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாகி, தொழில்துறை வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு, மக்களின் வாழ்வாதாரம் வலுப்பெறுகிறது.