ரிட்ஜ்வே வைத்தியசாலையின் அவசர அறிவிப்பு!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நாட்டில் தற்போது அதிகரித்து வரும் டெங்கு நோய்த் தொற்று குறித்து கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை பெற்றோரை எச்சரித்துள்ளது.

தொடர்ந்து பரவி வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக, கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்  சிறுவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையின் இயக்குனர் வைத்தியர் பிரதீப் ரத்னசேகர தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு உடனடி  சிகிச்சையை வழங்குவதற்கு பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

எனவே, சிகிச்சைக்காக தங்களுடைய பிள்ளைகளை அழைத்து வரும் பெற்றோர் வைத்தியசாலையால் கோரப்படும் ஆவணங்களை சரிவர கொண்டுவருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

இதன்படி, தனிநபர் சுகாதார எண், குழந்தையின் சுகாதார மேம்பாட்டுக் குறிப்பேடு(எடை குறிப்பேடு),  உணவு ஒவ்வாமை அல்லது மருத்துவ பதிவுகள்,  இதற்கு முன்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கான அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்களை சரிவர எடுத்து வருமாறு பெற்றோர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

அத்துடன் மேலதிக  தகவல்களுக்கு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின்  011 2693711 என்ற அலுவலக இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

Share this Article
Leave a comment