யாழ். போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியத்தில் தீ விபத்து – பல கோடி மருந்துகள் நாசம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (09/05) அதிகாலை பிரதான மருந்துக் களஞ்சியப் பகுதியில் திடீரெனப் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது தகவல் அறிந்தது விரைந்து வந்த யாழ். மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர் , வைத்தியசாலை ஊழியர்கள், பொலிசார், மற்றும் முப்படையினர்…

SUB EDITOR SUB EDITOR

சென்னையிலிருந்து வெளியேற வேண்டாம் – ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

திமுக கட்சியினர் அனைவரும் சென்னையை விட்டு வெளியேறாமல் அங்கேயே தங்கி இருக்க வேண்டும் என கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழ்நாடு அரசியல் களம் பெரும் பரபரப்புடனே நிலவி வருகிறது. தவெக ஆட்சியமைப்பதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி…

SUB EDITOR SUB EDITOR

கபில வழக்கில் பிணையாளர்கள் நீதிமன்றை அவமதிப்பு!!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்துக்காக 'எயார்பஸ்' விமானங்களைக் கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப்…

SUB EDITOR SUB EDITOR

உலக சந்தையில் அதிரடியாக உயர்ந்த மசகு எண்ணெய் விலை!!

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் மீண்டும் மோதல் இடம்பெற்றுள்ள நிலையில் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 2.64 சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றின் விலை 102.7 அமெரிக்க…

SUB EDITOR SUB EDITOR

ராஜங்கனே சத்தாரதன தேரர் கைது

ராஜங்கனே சத்தாரதன என்ற தேரர், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கு சமூக வலைதளங்கள் ஊடாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின் பேரில் அவர்…

SUB EDITOR SUB EDITOR

நாடாளுமன்றில் ஒலித்த மலையக பிரச்சனை..!

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களை நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். தோட்ட அதிகாரியா, தொழிலாளியா என்பது முக்கியமல்ல. சட்டமென்பது அனைவருக்கும் சமம் என அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாக அறிவித்தார். ஆரம்ப கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர்…

SUB EDITOR SUB EDITOR

கடற்றொழிலாளர்களின் பிரச்சனை தொடர்பில் கலந்துரையாடல்

யாழ் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீர்வளத்திணைக்கள உதவி பணிப்பாளரை மக்கள் போராட்ட முன்னணியின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே சந்தித்துள்ளார். இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைகள் காரணமாக இலங்கை கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும்,…

SUB EDITOR SUB EDITOR

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உயர் நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை !

அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, மீண்டும் ஒரு அழைப்பாணையை அனுப்புமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2022, மே 9 அன்று “அரகாலயா” போராட்டத் தளத்தின்…

SUB EDITOR SUB EDITOR

போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்கு – ஜனாதிபதி வலியுறுத்தல்

போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழிப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் உட்பட அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புகளை விரைவாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்கான "முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்பாட்டுச்…

SUB EDITOR SUB EDITOR

பல்கலைக்கழக அனுமதியில் மாணவர்களுக்கு ஏற்படும் ‘காலக்கெடு பொறி’ – திருத்தம் கோரும் சிறகுகள் அமையம்

இலங்கையில் உயர்தரக் கல்வியை முடித்து பல்கலைக்கழகப் பிரவேசத்திற்காகக் காத்திருக்கும் மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) விண்ணப்பக் காலக்கெடு நடைமுறைகளில் அவசர மாற்றங்களைக் கோரி 'சிறகுகள் அமையம்' இன்று உத்தியோகபூர்வ கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. தற்போதைய நடைமுறையில்,…

SUB EDITOR SUB EDITOR

இன்று நள்ளிரவு முதல் ரைஸ், பிரியாணி விலை அதிகரிப்பு!

இன்று (07/05) நள்ளிரவு முதல் ரைஸ், பிரியாணி மற்றும் நாசிகுரென் ஆகிய உணவு வகைகளின் விலைகளை 25 ரூபாவினால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தி நடத்தப்படும் சிற்றுண்டிச்சாலைகளில் சாதாரண தேநீர் மற்றும் பால்…

SUB EDITOR SUB EDITOR

மீண்டும் அதிகரிக்கவுள்ள மின்சாரக் கட்டணம் ..?

இலங்கையில் 'பவர் வீலிங்' எனப்படும் மின்சார விநியோக சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தாமல், ஏற்றுமதித் தொழிற்சாலைகள் மீது மீண்டும் மின்சாரக் கட்டண உயர்வைத் திணிப்பது நாட்டுக்கு பாரிய பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்தும் என ஏற்றுமதி உற்பத்தியாளர்கள் எச்சரித்துள்ளனர். குறைந்த மழைவீழ்ச்சி, நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்தின்…

SUB EDITOR SUB EDITOR

ஸ்டாலினின் ஒரு வார்த்தையில் விஜய்க்கான வாய்ப்பு!!

தவெக தலைவர் விஜய்க்கு, முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினால் ஆதரவு கொடுக்கலாம் என காதர் மொய்தீன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026 முடிவுகளின்படி, தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும்,…

SUB EDITOR SUB EDITOR

வலயத்தின் நான்கு பாடசாலைகள் மூடல்!!

பாடசாலை மாணவர்களிடையே காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதன் காரணமாக, தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகளை நாளை (08/05) மூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில், நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெனியாய வலயக் கல்விப்…

SUB EDITOR SUB EDITOR

அவசர முடிவுகளை எடுக்க ஸ்டாலினுக்கு அதிகாரம்..!

திராவிட முன்னேற்றக் கழக அரசு கடந்த ஐந்தாண்டு காலத்தில் செயல்படுத்திய திட்டங்கள் அப்படியே தொய்வின்றி தொடர்ந்தால் தான் தமிழ்நாடு அதே வேகத்தில் வளர்ச்சியைத் தக்க வைக்க முடியும் என்பதும் நமது விருப்பம் என ஆலோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத்…

SUB EDITOR SUB EDITOR

லாப்ஸ் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக திங்கட்கிழமை பாரிய போராட்டம்!!

மஞ்சள் நிற எரிவாயு சிலிண்டர்களின் விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் திங்கட்கிழமை (11/05) லாப்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார். கொழும்பில்…

SUB EDITOR SUB EDITOR