உப்பு நீரில் விளக்கொரியும் அற்புதம் – வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு தீர்த்தம் எடுக்கும் நிகழ்வ 25/05 இல் சிறப்பாக இடம்பெற்றது

இந்த பொங்கல் உட்சவத்தின் முதல்    திங்கள்  பாக்குத் தெண்டல் உற்சவமும்  இரண்டாவது திங்கள் உப்பு நீரில் விளக்கெரியும் அதிசயமான நிகழ்வுக்காக அம்மனுக்கு தீர்த்தம் எடுக்கும் நிகழ்வும் இறுதி மூன்றாவது திங்கள் வைகாசிப் பொங்கல் விழாவும் இடம்பெறும்.

இந்த சடங்கு முறையில்  இரண்டாவது திங்கள் கிழமை நாளில் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

காட்டு விநாயகர் ஆலயத்தில் நேற்று மாலை  இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளை தொடர்ந்து தீர்த்தக்குடம் பாரம்பரிய வழிகள் ஊடாக முல்லைத்தீவு தீர்த்தக்கரைக்கு எடுத்து செல்லப்பட்டு முல்லைத்தீவு பெருங்கடலில்  தீர்த்தம் எடுக்கப்பட்டு மீண்டும் பாரம்பரிய வழிகள் ஊடாக காட்டுவிநாயகர் ஆலயத்தை சென்றடைந்து அங்கு உப்புநீரில் விளக்கெரியும் அற்புதம் இடம்பெறும்

எதிர்வரும் 01.06.2026 திங்கள் அன்று வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி விசாகப்பொங்கல் சிறப்பாக நடைபெறவுள்ளது.

Share this Article
Leave a comment