நாட்டின் பல பகுதிகளில் மெனிஞ்சைடிஸ் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 237 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. நோய் பரவுவதைத் தடுப்பதற்காக, சுத்தமான குடிநீரைப் பயன்படுத்துமாறும், இயலுமானவரை எப்போதும் கொதித்தாறிய நீரைக் அருந்துமாறும் சுகாதாரப் பிரிவினர்…
வவுனியாவில் 10 கோடிக்கு மேற்பட்ட பணத்துடன் வர்த்தகர் ஒருவர் குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு பொலிசில் முறைப்பாடு செயயப்பட்டுள்ளது. வவுனியா, குட்செட்வீதி, அம்மா பகவான் ஒழுங்கையில் வசித்து வந்த கௌரி யுவலர்ஸ் என்னும் பெயரில் நகை கடை நடத்தி…
சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி இலங்கையர்களை டுபாய் மற்றும் மோல்டோவா நாடுகளுக்கு வேலைக்காக அனுப்பி வைத்த டுபாய் சுத்தா என்ற ரன்தெடிகே நிஷாங்க பிரியதர்ஷன என்பவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் குழுவினர் நேற்று (01/06) கடுவலை…
2026 ஆம் ஆண்டிற்கான உரிமங்களை புதுப்பிப்பதற்கு இணையாக, உயிர்க்காப்பு துப்பாக்கி உரிமம் வைத்திருப்பவர்களின் துப்பாக்கிகளுக்கான சான்றிதழ் ஒன்றை வழங்குவது தொடர்பாக பொலிசாரால் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, உரிமத்தைப் பெற்று ஆறு மாதங்கள் நிறைவடையும் போது, அதற்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு…
போக்குவரத்து விதிமீறல்களுக்கான தண்டப்பணத்தைச் செலுத்தவேண்டியுள்ளதாகக் கூறி, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலியான குறுஞ்செய்திகளை அனுப்பி முன்னெடுக்கப்படும் இணையவழிப் பணமோசடிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது. சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசி எண்கள்…
திடீர் மின் தடை ஏற்படுவதைத் தவிர்த்து, மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணும் நோக்கில், இன்றைய தினமும் (31/05) முற்பகல் 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை வீடுகளின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின் உற்பத்தித் தகடுகளை செயலிழக்கச் செய்யுமாறு…
நேற்று (30/05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு இணையாக, முச்சக்கர வண்டி கட்டணங்களையும் உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, கட்டண மீட்டர்களைப் பயன்படுத்தி இயக்கப்படும் கொழும்பு,…
துபாய் அல் மக்தூம் சர்வதேச விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக 2,000 இலங்கைத் தொழிலாளர்களைப் பணியமர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அல்மக்தூம் விமான நிலைய விரிவாக்க பணிகளை மேற்கொள்ளும் சீனாவின் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் (CHEC) நிறுவனம் இது தொடர்பில் துபாயில் உள்ள இலங்கைத்…
டீசல் விலை நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனவே பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தும் மக்கள் வழமையான கட்டணங்களிலேயே பயணிக்க முடியும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது நேற்று (30.05)…
பாரிஸின் புறநகர்ப் பகுதியான சென்-சென்-டெனிஸ் மாவட்டத்தில் உள்ள பொபினி நகரில் நேற்று (30/05) பிற்பகலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறில் இருவரைக் கத்தியால் குத்திக் காயப்படுத்திய நபர் ஒருவர், காவல்துறையினரையும் தாக்க முற்பட்டபோது சுட்டுக்கொல்லப்பட்டார். எக்டர் பெர்லியோஸ்…
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ஏழு இலங்கை இளைஞர்கள் நேற்றுமுன்தினம் (27/05) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் தொடர்பான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின்…
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் சி.டி.ஓ. கபில சந்திரசேனாவின் மர்ம மரணம் தொடர்பான விசாரணை இன்று(29/05) கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அர்செகுலரத்ன மற்றும் சட்டத்தரணி உதர முஹந்திரம் ஆகியோரை சாட்சிகளாக அழைக்க வேண்டுமா என்பது…
ரூபாயின் பெறுமதி இன்று (29.05) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 324.45 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன்…
காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் நிலுவையில் உள்ள 11 ஆயிரம் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை தொடர்கதையாக்க முடியாது. நாடளாவிய ரீதியில் 15 குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த ஆண்டு 5000 முறைப்பாடுகளையும், அடுத்த ஆண்டு 6000 முறைப்பாடுகளையும் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது…
அரசின் இணைந்த சேவைகளில் உள்ள உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றங்கள் பல்வேறு காரணங்களால் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்காக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த அறிவுறுத்தல்களும்…
சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல்களின் உண்மைத்தன்மையையும், அதன் பின்னணியையும் தீர்க்கமாக ஆராய்ந்த பின்னரே அவற்றிற்கு விருப்பம் தெரிவிக்கவோ அல்லது பகிரவோ வேண்டும். சமூக ஊடகங்களில் வரும் அனைத்தையும் கண்மூடித்தனமாக நம்புவதால் சமூகத்தில் பல பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன என வடக்கு மாகாண …
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account