சீனாவால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உலர் உலணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று காலை (29) நடைபெற்றது. இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த நிகழ்வில் இலங்கைக்கான…
யாழ்ப்பாணம் வேலணை பிரதேச சபையின் நத்தார் ஒளிவிழா நிகழ்வுகள் நேற்றுச் சிறப்புற நடைபெற்றன. வேலணை பிரதேச சபை தவிசாளர் நவசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் நத்தார் ஒளிவிழா நிகழ்வுகள் நடைபெற்றன. ஒளிவிழாவில் பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
சிறு குற்றங்கள் தொடர்பான சந்தேக நபர்களுக்கு சிறைத் தண்டனை விதிப்பதற்கு பதிலாக பெற்றோர் அல்லது பாதுகாவலகளின் கீழ் சில மாதங்கள் வீட்டுக்காவலில் வைப்பதற்கான சட்டங்களை அறிமுகப்படுத்த நீதி அமைச்சசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற சந்தேக நபர்கள் சிறைச்சாலைக்குள் பல்வேறு நபர்களுடன்…
நாளை (30 டிசம்பர்) மற்றும் நாளை மறுதினம் (31 டிசம்பர்) ஆகிய தினங்களை விசேட டெங்கு ஒழிப்பு தினங்களாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. கடந்த 04 வாரங்களில் நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் துரித அதிகரிப்பு ஏற்பட்டுள்ள…
ஹங்கேரிக்குள் நுழைய முயன்ற இலங்கையர்கள் உள்ளிட்ட 27 சட்டவிரோத குடியேற்றவாசிகள் ரோமானிய எல்லையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், எரித்திரியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உடைகள், இரும்பு போன்றவற்றை…
அளவுக்கதிகமான போதைப் பொருளை ஊசி மூலம் ஏற்றிய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவராவார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் தலைமறைவாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இவர் யாழ்ப்பாணத்தில் திணைக்களம் ஒன்றில் அலுவலக உதவியாளராகக்…
இந்துக்களின் திருப்பள்ளி எழுச்சி, திருவெம்பாவை விரதம் மற்றும் ஊர்வலம் இன்று (28) அதிகாலை ஆரம்பமாகின்றது. சிவனை நினைந்து வழிபடும் இவ்விரதம் இன்று 28.12.2022ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை ஆரம்பமாகின்றது. தொடர்ந்து 10 தினங்கள் திருவெம்பாவை விரதம் மற்றும் ஊர்வல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜாவின் வழிகாட்டலில் மூன்றாவது வருடமாகவும் திருவெம்பாவை பாராயணம் இன்று (டிசம்பர் 28) திருவெம்பாவை விரதத்தின் முதலாம் நாளில் முன்னெடுக்கப்ட்டது. யாழ் பல்கலைக்கழக பரமேஸ்வரா ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமான திருவெம்பாவை பாராயணம் இராமநாதன் வீதியூடாக…
இலங்கையின் 75ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலுடன் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் நடைபெறும் என்று ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார். சுதந்திர தின நிகழ்வுகள் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளன.…
இலங்கைக்கான சீனத் தூதரகத்தைச் சேர்ந்தவர்கள் இன்று மாலை (டிசம்பர் 28) யாழ்ப்பாணம் கோட்டைக்குச் சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் பட்டு வேட்டியுடன் சென்றிருந்தார். இலங்கைக்காக சீனப் பிரதித் தூதுவர் ஹூ வெய், சீனத் தூதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் உட்பட…
வீடு உடைத்துத் திருட முயன்றார் என்று கூறப்படும் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் சாவகச்சேரி வடக்கு, மண்டுவிலில் இன்று காலை (டிசம்பர் 28) நடந்துள்ளது. வீட்டிலிருந்தவர்கள் வெளியே சென்றிருந்த சமயம் வீட்டில் ஒருவர் மட்டுமே இருந்துள்ளார்.…
காரைநகர், முல்லைப்புலவில் கடலாமை இறைச்சியுடன் ஐவர் இன்று (டிசெம்பர் 28) கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர். களபூமி பொலிஸ் காவலரணில் கடமையில் இருந்த பொலிஸார் சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து 25 கிலோ கடலாமை இறைச்சி கைப்பற்றப்பட்டது…
அனலைதீவு பிரதான வீதி மிக மோசமாக சேதமடைந்து காணப்படுவதால் பெரும் அசெளகரியங்களுக்கு மத்தியில் பயணிக்கவேண்டியுள்ளது என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அனலைதீவு இறங்குதுறை தொடக்கம் தெற்கு முருகன் கோவில் வரையான மற்றும் வாகனங்கள் செல்லும் பிரதான வீதிகள் பல இடங்களில் சேதமடைந்து…
5 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் யாழ்ப்பாணம், ஆறுகால்மடத்தில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர். அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவர்கள் மற்றும்…
நாடளாவிய ரீதியில் நடைபெற்ற செம்பு நடனப் போட்டியில் புங்குடுதீவு மத்திய கல்லூரி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் புங்குடுதீவு மத்திய கல்லூரி மாணவிகள் இரண்டாம் இடத்தைப் பெற்றுகொண்டுள்ளனர்.
மின்கட்டணத்தைத் தன்னிச்சையாக அரசாங்கம் உயர்த்துமானால், அதற்கு எதிராக அனைத்துத் தொழிற்சங்க நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. மின்கட்டணம் உயர்த்தப்பட்டால், கட்டணம் செலுத்தாது உள்ள வாடிக்கையாளரின் மின் இணைப்புக்களைத் துண்டிக்கும் நடவடிக்கைகளில் இருந்து விலகிக்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account