வலிகாமம் வடக்கு கிராம அலுவலர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (டிசம்பர் 30) மேற்கொண்டனர். யாழ். வலிகாமம் வடக்கு கட்டுவன் மேற்கு கிராம அலுவலகம் தொடர்ச்சியாக தாக்கப்பட்டு வருவதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐக்கிய இலங்கை கிராம சேவையாளர் சங்கம்…
யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக செயலாளர் ம.பிரதீபன் பதில் மாவட்ட செயலராக இன்று (டிசம்பர் 30) நியமனம் செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலராகக் கடந்த 3 ஆண்டுகளாகக் கடமையாற்றிய க.மகேசன், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றுச்…
பதவி உயர்வுடன் இடமாற்றல் பெற்றுச் செல்லும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் இன்று (டிசெம்பர் 30) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் கௌரவிக்கப்பட்டார். யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக செயலாளர் ம.பிரதீபன் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.…
யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் பதவியில் இருந்து விஸ்வலிங்கம் மணிவண்ணன் விலகியுள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை இன்று (டிசெம்பர் 30) யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சிச் சபை ஆணையாளர் ஆகியோருக்குக் கையளித்துள்ளார். நாளை (டிசெம்பர் 31)…
அரசாங்க ஊழியர்களில் ஆயிரத்து 150 பேருக்கு சம்பளம் இன்றிய ஐந்தாண்டு விடுமுறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளமின்றி ஐந்தாண்டு விடுமுறை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை அடுத்து இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள்,…
அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்தும் பெண்களுக்கு வைத்திய நிபுணர் பிரமிளா ரணசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். உரிய தரத்திலான அழகு சாதனப் பொருள்களை மட்டுமே பெண்கள் பயன்படுத்த வேண்டும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உரிய தரத்தில் இல்லாத அழகு சாதனப் பொருள்களைப்…
எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்வது தொடர்பில் இன்று (டிசெம்பர் 30) தீர்மானிக்கப்படும் என்று அறிய முடிகின்றது. நாளை மறுதினம் முதலாம் திகதி எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கு அமைய எரிபொருள் நிலைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும். எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் தொடர்பில்…
சீன அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட அரிசியை சமைத்து உண்ட பல சிறுவர்கள் ஒவ்வாமையால் பாதிக்கப்படுகின்றனர் என்று சமூக ஊடகங்களில் குற்றஞ்சாட்டப்படுகின்றது. நாடு முழுவதும் இருந்து இந்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்…
தனியார் விடுதி ஒன்றுக்குள் புகுந்த கும்பல் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணம், நல்லூர் வீதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றுக்குள் புகுந்தே வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (டிசெம்பர் 29) இரவு நடந்துள்ளது. மூன்று மோட்டார் சைக்கிள்களில்…
கொடிகாமம், கெற்பேலியில் 60 வயது முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று (டிசெம்பர் 29) காலை மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இரவு உறவினர்கள் தேடிச் சென்றபோது, வீட்டில் இருந்து சற்றுத் தொலைவில் உள்ள நீரேரியில்…
வவுனியா, செட்டிக்குளத்தில் புதையல் தோண்டப் பயன்படுத்தப்படும் ஸ்கானருடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா செட்டிக்குளத்தில் விசேட சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப் படையினரே இளைஞரைக் கைது செய்துள்ளனர். சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய இளைஞரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது…
நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் உள்ள கலைஞர்களுக்கு வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கான பயிர் விதைகள் வழங்கப்பட்டன. கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையுடன் நாடு முழுவதும் முனனெடுக்கப்படும் "தார்மீக விவசாயம் சிறந்த கலாசாரம்" எனும் வேலைத் திட்டத்துக்கு அமையவே…
ஆலமாவன கலைக் குழுமத்தின் சிறந்த நாட்டுக்கூத்து கலைஞரும் பரதநாட்டிய நங்கையுமான விஜயகுமாரன் தனுசா இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கதிறன் விருது வழங்கல் விழாவில் பேச்சாற்றல் போட்டியில் தேசிய ரீதியில் 2 ஆம் இடத்தைப் பெற்றுள்ளார். இவர் மிகச்சிறிய…
தென்தீபம் இதழ் 7 நூல் வெளியீட்டு விழா நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையுடன், தீவகம் தெற்கு பண்பாட்டுப் பேரவையும், பிரதேச செயலகமும் இணைந்து இந்த நூல் வெளியீட்டை ஏற்பாடு…
கிளிநொச்சி, உதயநகர் பகுதியில் 22 வயதுப் பெண் ஒருவர் முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்டுள்ளார் என்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியின் இலக்கம் வழங்கப்பட்டபோதும், இதுவரை சந்தேகநபர் கைது செய்யப்படவில்லை என்று பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.…
மன்னார், தலைமன்னார் பிரதான வீதியில் தராபுரம் பிரதேசத்தில் நடந்த விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (டிசம்பர் 29) காலை 10 மணிக்கு நடந்துள்ளது. மன்னாரில் இருந்து பேசாலை நோக்கிப் பயணித்த பொலிஸ் டிப்பெண்டர் ரக வாகனமும்,…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account