பெருந்தொகைப் பணம் மோசடி – இரு பெண்கள் வல்வெட்டித்துறையில் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பெருந்தொகை நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு பெண்கள் காங்கேசன்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 36 மற்றும் 38 வயதான இரு பெண்களே நேற்றுமுன்தினம் (ஜனவரி 4) கைது செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கொன்றின் சான்றுப் பொருள்களாக வைக்கப்பட்டிருந்த 70 பவுண் தங்கத்தை விடுவித்துத் தருவோம் என்று தெரிவித்து 36 இலட்சத்து 94 ஆயிரத்து ரூபா பணத்தை இரண்டு பெண்களும் மோசடி செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுப் பொலிஸாரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Share this Article