குடும்பஸ்தரின் சடலம் வீட்டிலிருந்து மீட்பு – பொலிஸார் விசாரணை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வடமராட்சி கிழக்கு, மணற்காட்டில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று (ஜனவரி 5) மீட்கப்பட்டுள்ளது.

மணற்காடு பழைய தேவாலயத்துக்கு பின்பாக உள்ள வீட்டில் தனித்து வசித்து வந்த கந்தசாமி பன்னீர்ச்செல்வம் (வயது-56) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது மனைவி 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்திருந்த பின்னர் இவர் தனியாகவே வாழ்ந்து வந்துள்ளார்.

வீட்டில் துர்நாற்றம் வீசியதையடுத்து, கிராம அலுவலரும் மக்களும் இணைந்து வீட்டைத் திறந்து பார்த்த போது சமையலறையில் அவருடைய சடலம் காணப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்ற திடீர் இறப்பு விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Share this Article