ஏழாலையில் நேற்றிரவு வாள்வெட்டு – ஒருவர் படுகாயம்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சுன்னாகம், மயிலங்காடு வீதியில் நேற்று (ஜனவரி 7) இரவு நடந்த வாள்வெட்டுத் தாகக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஏழாலையை தெற்கைச் சேர்ந்த ஒருவர் மீதே வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது. வாள்வெட்டில் காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வரே வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியவர்கள் அடையாளம் காணப்படாத நிலையில், சுன்னாகம் பொலிஸார் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article