காங்கேசன் துறைமுக கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக துறைமுக கட்டுமானங்களை விரைவாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். இன்று (ஜனவரி 7) சனிக்கிழமை வட மாகாண ஆளுநர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கப்பல்…
தென்னை மரம் சரிந்து வீழ்ந்ததில் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் வீட்டிலிருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளனர். அனலைதீவு மூன்றாம் வட்டாரத்தில் இச் சம்பவம் நேற்று மாலை (ஜனவரி 6) இடம்பெற்றுள்ளது. வேலுப்பிள்ளை மார்கண்டு என்பவருடைய வீட்டிலேயே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. காற்றுடன்…
ஜெலி மீனின் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 52 வயதான அல்ஜின் ராஜ் என்ற மீனவரே உயிரிழந்துள்ளார். இவர் 4 மாதங்களுக்கு முன்னர் பண்ணைப் பகுதியில் இறால் பிடித்துக் கொண்டிருந்தபோது ஜெலி மீனின் தாக்குதலுக்கு இலக்கானார்.…
சீன அரசால் வழங்கப்பட்ட தலா 8 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் நெடுந்தீவில் 100 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பொருளாதாரத்தில் நலிந்த 100 குடும்பங்களுக்கு இந்த உதவிகள் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் நெடுந்தீவுக் கிளையால் வழங்கப்பட்டுள்ளன. உலர் உணவுப் பொதிகள்…
மண்டைதீவு சிறுப்புலம் சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய பஞ்சதள கோபுரத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
அனலைதீவு, புளியந்தீவு நாகேஸ்வரர் ஆலய வருடாந்த மார்கழித் திருவாதிரை திருமஞ்சனமும் ஆனந்தக் கூத்தும் பக்திபூர்வமாக நடைபெற்றன.
இலங்கையின் 75ஆவது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு வேலணைப் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சிரமதானத்தில் ஈடுபட்டனர். பிரதேச செயலகத்தின் சுற்றுச்சூழல் பிரதேச செயலக உத்தியோத்தர்களால் சிரமதானத்தின் மூலம் துப்புரவாக்கப்பட்டது.
இலங்கைக்கு அருகே ஏற்பட்டுள்ள காற்றுச் சுழற்சி காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் நாள்களில் மழையுடனான காலநிலை நிலவும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. காற்றுச் சுழற்சி காரணமாக இன்று முதல் (ஜனவரி 6) எதிர்வரும் 8ஆம் திகதி வடக்கு, கிழக்கு மாகாணங்களில்…
வேலணை பிரதேச சபையின் புங்குடுதீவு உபஅலுவலகத்தின் 2022ஆம் ஆண்டின் தேசிய வாசிப்பு மாத இறுதிநாள் நிகழ்வும் பரிசளிப்பும் நேற்றுமுன்தினம் (ஜனவரி 4) நடைபெற்றது. இந்த நிகழ்வுகள் புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கில் நடைபெற்றது.
நெடுந்தீவு ஆலமாவன பிள்ளையார் ஆலய வருடந்த தீர்த்தத் திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
நெடுந்தீவில் உள்ள அனைத்து மதத் தலங்களுக்கும் சூரிய சக்திப் மின் படலங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி மின் படலங்களைப் பெற்றுக் கொள்வதற்கான இலவசத்திட்டத்துக்கான விண்ணப்பப் படிவங்கள் நேற்று (ஜனவரி 5) மதத் தலங்களின் நிர்வாகங்களிடம் கையளிக்கப்பட்டன. கடற்றொழில் அமைச்சர்…
வடமராட்சி கிழக்கு, மணற்காட்டில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று (ஜனவரி 5) மீட்கப்பட்டுள்ளது. மணற்காடு பழைய தேவாலயத்துக்கு பின்பாக உள்ள வீட்டில் தனித்து வசித்து வந்த கந்தசாமி பன்னீர்ச்செல்வம் (வயது-56) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது மனைவி 2004 ஆம் ஆண்டு…
லாஃபஸ் எரிவாயு நிறுவனம் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைத்துள்ளது. 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5 ஆயிரத்து 80 ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2 ஆயிரத்து 32 ரூபா என்று…
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் இந்த மாதம் இலங்கைக்கு வரவுள்ளார். எனினும் அவரது வருகைக்கான திகதி இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவி ஏற்ற பின்னர் ஜெய்சங்கர் இலங்கை வரும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.…
கடந்த ஆண்டு நவம்பரில் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி விண்ணப்பித்த அனைத்து இலங்கையர்களின் Onshore Protection (Subclass 866) விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று உள்துறை அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நவம்பர் மாதத்தில் அவுஸ்திரேலியாவில் உள்ள(onshore) 50 இலங்கையர்கள் தமது Onshore Protection (Subclass…
நாட்டுக்குள் தங்கம் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் 22 கரட்டுக்கு மேற்பட்ட தங்கத்தை ஆபரணங்களாக கொண்டு வருவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சு நேற்று (ஜனவரி 5) வெளியிட்டுள்ளது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account