தைப்பொங்கலுக்காக நாளை மின்வெட்டு இல்லை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நாடளாவிய ரீதியில் நாளை (ஜனவரி 15) மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று, நாளை மற்றும் நாளைமறுதினம் ஆகிய மூன்று தினங்களுக்கான மின்வெட்டு அட்டவணை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் நேற்று வெளியிடப்பட்டிருந்தது.

தைப்பொங்கல் தினமான நாளையும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பில் பல தரப்புக்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

இந்தநிலையில் தைப்பொங்கல் தினமான நாளை மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்று மின்சார சபையின் தலைவர் அறிவித்துள்ளார்.

Share this Article