கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவராக ஸ்ரீரங்கா தெரிவு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவராக ஜே.ஸ்ரீரங்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கால்பந்தாட்ட சம்மேளன தலைவருக்கான தெரிவில் 27 வாக்குகளை பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட ஜகத் ரோஹன 24 வாக்குகளை பெற்றுக் கொண்டார். இந்த தேர்தலில் பங்கேற்பதற்காக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமார் வந்திருந்த போதும், அவரால் போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை.

Share this Article