ஆசிரிய நியமனத்துக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

தற்போது அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை விண்ணப்பங்களை ஏற்கும் திகதி ஒரு வாரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

இன்று (பெப்ரவரி 10) நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை சமர்ப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது விண்ணப்பங்களை அனுப்புவதற்கு மேலும் ஒருவார காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share this Article