யாழில் முன்னெடுக்கப்பட்டது வடக்கு மாகாண மரநடுகை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

“இயற்கை வளத்தினை மேம்படுத்துவோம் பசுமையினை உருவாக்குவோம்” என்னும் கருப்பொருளில் வடக்கு மாகாண மரநடுகை யாழ்ப்பாண பண்ணைக் கடற்கரைப்பகுதியில் நேற்றுக் காலை (பெப்ரவரி 11) முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகமும், யாழ். மாநகர சபையும் இணைந்து இந்த மரநடுகைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன்தியாகராஜா கலந்து கொண்டு மரக்கன்றுகளை நாட்டிவைத்தார்.

யாழ். மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரன், யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பதவிநிலை அதிகாரிகள் எனப் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share this Article