பயணிகள் போக்குவரத்து சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும் நேரத்தில் கைப்பேசி பயன்படுத்திய இலங்கை போக்குவரத்துச் சபை வவுனியா சாலை சாரதியொருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான தவறுகள் மீண்டும் நடைபெறாத வகையில், இனி வருங்காலங்களில் விதிமுறைகளை மீறும் சாரதிகள்…
கச்சதீவு அந்தோனியார் திருத்தல திருவிழா காலப்பகுதியில் நெடுந்தீவு - கச்சதீவு மற்றும் நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையேயான படகு சேவை குறித்த கலந்துரையாடல் இன்று (17/02) பிரதேசசெயலகத்தில் இடம்பெற்றது. பிரதேசசெயலர் ந.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நெடுந்தீவு பிரதேசசபையின் உப தவிசாளர் …
நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரிகளையும் இணைத்துக்கொண்டு நாளை புதன்கிழமை (18/02) முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, நோய்த்தடுப்புத் திட்டத்தின் தரவுப் புறக்கணிப்புப் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பமாக உள்ளதுடன், நாளாந்த, வாராந்த…
அரசியலமைப்பின் 121.1 பிரிவின் கீழ் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட 'குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம்' மற்றும் 'வாடகையை இரத்துச் செய்யும் சட்டமூலம்' ஆகியவை தொடர்பில் முறையான தீர்மானம் எடுக்க வேண்டிய அவசியமில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாகச் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று…
இலங்கை போக்குவரத்து சபையின் பதவிகளுக்கு ஊழியர்களை உள்வாங்கும் நடவடிக்கைகள், தகைமைகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் எனப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். அனைத்து பதவிகளுக்குமான ஊழியர் உள்வாங்கல் செயன்முறையை முறைப்படியாக…
அமெரிக்காவின் ரோட் ஐலண்ட் பகுதியில் உள்ள ஹொக்கி மைதானத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். வெளிநாட்டு ஊடகங்களின் செய்தியின்படி, இந்தத் துப்பாக்கிச் சூட்டினால் மேலும் மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் துப்பாக்கிச் சூட்டை நடத்திய…
நெடுந்தீவில் "பசுந்தீவு அமையம்" உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு நிர்வாக சபையும் கடந்த 15.02.2026 அன்று உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்திறன், படைப்பாற்றல், உற்பத்தி மற்றும் ஆக்கத்திறன்கள் சார்ந்த அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு இக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பசுந்தீவு அமையத்தின் நிர்வாகிகளின் விபரம் தலைவர் -…
கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழாவுக்கான ஆயத்தப்பணிகளின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் நெடுந்தீவு பிரதேசசெயலர் ந.பிரபாகரன் தலைமையில் பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் (16/02) இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலில் கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல பரிபாலகர் அருட்பணி ப.பத்திநாதன் அடிகளார்,…
அரச நிதி மற்றும் நாணயக் கொள்கை தொடர்பான பிம்ஸ்டெக் (BIMSTEC) நிபுணர் குழுவின் ஆரம்பக் கூட்டத்தை, 2026 ஆம் ஆண்டில் இலங்கையில் நடத்துவதற்காகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வங்காள விரிகுடா…
கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழாவை முன்னிட்டு, நெடுந்தீவு – கச்சதீவு மற்றும் நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையிலான கடல் போக்குவரத்து சேவைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (17/02) பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. பிரதேச செயலாளர் திரு. N. பிரபாகரன் தலைமையிலும்,…
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact Summit 2026' மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை (17/02) பிற்பகல் இந்தியா புறப்படவுள்ளார். செயற்கை நுண்ணறிவை (AI) மனிதகுலத்தின் நலனுக்காகப் பொறுப்புடன் பயன்படுத்துவதை நோக்கமாகக்…
நெடுந்தீவு பிரதேசத்தில் உள்ள சுற்றுலா வாகன சாரதிகள் அனைவரும் தங்கள் வாகனங்களுக்கான 2026 ஆம் ஆண்டுக்குரிய வாகன உரிமம் மற்றும் வாகனத் தரிப்பிட உரிமம் என்பவற்றை பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து (16/02) எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நெடுந்தீவு பிரதேச சபையிடம் உரிமங்களைப் …
2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை குறித்து விசேட அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். நாளை (17/02) ஆரம்பமாகவுள்ள பரீட்சை தொடர்பில்…
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நெல் கொள்வனவுக்கான குறைந்தபட்ச விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, ஒரு கிலோகிராம் கீரி சம்பா நெல்லின் விலை 140 ரூபாவாகவும், சம்பா நெல்லின் விலை 130 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு கிலோகிராம் நாட்டரிசி நெல்லின் விலை 120…
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 20 மற்றும் 24 வயதுடைய இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கொட்டாவையில் வைத்து இவர்கள்…
கோப்பாயில் இன்று (16/02) மாலை போக்கு வரத்து பாதை தொடர்பில் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் மோதலாக மாறி 56 வயதான ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். போக்கு வரத்து பாதை தொடர்பில் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் மோதலாக மாறியது. இதன்போது இடம்பெற்ற தாக்குதலில்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account