2026 பெப்ரவரி 25 முதல் அல்லது அதற்குப் பின்னர் விண்ணப்பிக்கப்படும் பிரித்தானிய விஜய விசாக்களுக்கு இனி கடவுச்சீட்டில் விசா ஸ்டிக்கர் ஒட்டப்படமாட்டாது.
அதற்குப் பதிலாக, முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ‘eVisa’ முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் விசா அங்கீகரிக்கப்பட்டதும், கடவுச்சீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்படமாட்டாது.
உங்கள் விசா விபரங்கள் இணையவழியில் டிஜிட்டல் முறையில் சேமிக்கப்படும். முன்னதாக விசா ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக விசா மையத்தில் கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும்.
இனி அந்தத் தேவை இல்லை. நீங்கள் உங்கள் கடவுச்சீட்டை உங்களுடனேயே வைத்திருக்கலாம். BRP அட்டைகள் மற்றும் காகித முத்திரைகள் படிப்படியாக நீக்கப்பட்டு, அவுஸ்திரேலியாவைப் போன்ற டிஜிட்டல் முறைமை பின்பற்றப்படுகிறது.
பயணத்தை ஆரம்பிக்கும் முன் பிரித்தானிய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உங்கள் கடவுச்சீட்டு மற்றும் மின்னஞ்சலைப் பயன்படுத்தி இலவசமாகக் கணக்கை உருவாக்கவும். பின்னர் உங்கள் விசா அங்கீகரிக்கப்பட்டதும், அதனை உங்கள் கணக்கின் மூலம் சரிபார்க்கவும்.