சுமார் 112 கிலோகிராம் "குஷ்" மற்றும் ஹேஷ்" ரக போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட 22 தேரர்களில், 19 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளமை சட்ட வைத்திய அதிகாரியின் சோதனையில் தெரியவந்துள்ளது. தாய்லாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவிட்டு கடந்த ஏப்ரல்…
வடக்கு மாகாணத்தில் பயணிகளுக்கான சேவையை முன்னறிவித்தலின்றி இடைநிறுத்தி, பொதுமக்களுக்குப் மிகப் பெரிய அசௌகரியங்களை ஏற்படுத்திய வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 4 தனியார் பேருந்துகளின் வழியனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்…
மகா திறைசேரியினால் அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனமொன்றுக்கு வெளிநாட்டு கடன் தவணையாக செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, மோசடியாளர்களிடம் சிக்கியமை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முதன்முறையாக நீதிமன்றில் விடயங்களை அறிக்கையிட்டது. மின்னஞ்சல் கட்டமைப்பைப் பராமரிக்கும் நிறுவனம் இது குறித்து முன்னரே…
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அமைவாக, இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பான திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டை, தேசிய முறைமை செயல்பாட்டாளர் தனியார் நிறுவனம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, எதிர்வரும் மாதங்களில் மின்சாரக் கட்டணங்களில்…
கோதுமை மாவின் விலையை இன்று (29/04) முதல் அதிகரிப்பதற்கு ப்ரீமா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ப்ரீமா நிறுவனத்தின் கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலையை 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளமையே இந்த விலை உயர்விற்கான…
நாட்டில் மோட்டார் காப்புறுதி தொடர்பான முறைகேடுகள் மற்றும் தவறான செயல்பாடுகள் அதிகரித்து வருவதாக காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் மோட்டார் காப்புறுதி ஒப்பந்தங்கள் தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், குறிப்பாக காப்புறுதி வழங்கும் நிறுவனங்கள் மற்றும் இடைத்தரகர்கள்…
தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் பொதுமக்களுக்குத் தொடர்ச்சியாகத் தொல்லை கொடுப்பவர்களுக்கு எதிராக, அண்மையில் திருத்தப்பட்ட தொலைத்தொடர்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வழக்கு நடவடிக்கைகள் பிரிவின் பொறுப்பதிகாரியும், சட்டத்தரணியுமான…
தமிழர்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் எழுச்சி பாடல்கள் பல நூறு பாடல்களை பாடி நேற்றையதினம் (28.04) மறைந்த தேனிசை செல்லப்பா அவர்களுக்கு முல்லைத்தீவு றெட்பானா சந்திபகுதியில் மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் அகிலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் எழுத்தாளர்…
நெடுந்தீவு மேற்கு 01 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி காந்திதிலகர் திலகவதி அவர்கள் 28.04.2026 செவ்வாய்க்கிழமை காலமானார். அன்னார் காந்திதிலகர் அவர்களின் பாசமிகு மனைவியும் காலஞ்சென்றவர்களான தனுக்கோடி வள்ளியம்மை தம்பதியினரின் மகளும் நாகராசா பாக்கியம் தம்பதியினரின் மருமகளும் கீதா…
மக்கள் தங்களிடம் ஒப்படைத்துள்ள கடமைகளை நிறைவேற்றாமல், தங்களின் இயலாமைகளை மறைப்பதற்காகவும் அரசியல் நோக்கங்களுக்காகவும் அடுத்தவர் மீது இன்றைய ஆளும் தரப்பினர் கைகளை நீட்டக் கூடாது என்று தெரிவித்துள்ள ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், தீவக பிரதேசத்தில் ஈ.பிடிபி. மேற்கொண்ட தொடர்ச்சியான…
யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் தமிழ்நாட்டின் சில மீனவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது கரிசனையை வெளியிட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக அவர் தனது உத்தியோகபூர்வ X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே இவ்விடயத்தை தெரிவித்துள்ளார். குறித்த…
2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/26 கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழகப் பிரவேச விண்ணப்பங்கள் இன்று (28) முதல் மே 19 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2025 உயர்தரப் பெறுபேறுகளின்படி, 176,527 மாணவர்கள்…
நெடுந்தீவு சென் அன்ரனிஸ் சனசமூக நிலையமும், சென் அன்ரனிஸ் நிலாஜோதி முத்தமிழ் நாடக மன்றமும் இணைந்து நடாத்தும் தொழிலாளர் தின சிறப்பு நிகழ்வுகள் மே 01 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நெடுந்தீவில் இடம்பெறவுள்ளது. தொழிலாளர்களை மேன்மைப்படுத்தும் வகையில் மரதன் ஓட்டப்போட்டி, நீச்சல்…
நிதி அமைச்சின் கணினி அமைப்பிலிருந்து பிரான்ஸ் நாட்டுடன் தொடர்புடைய கடன் மீளச் செலுத்தல் ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி திருடப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் உள்ள ஹேக்கர்களே இதிலும் தொடர்புபட்டிருக்கலாம் எனப்…
யக்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெலும்மஹர பகுதியில், போலி அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதி பத்திரம் பயன்படுத்தி நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை (25/04) இரவு யக்கல பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத்…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் தொகையுடன் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளை வழிநடத்திய பிரதான சந்தேகநபரான பிக்குவை, எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேக நபர் இன்று (27/04)…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account