இலங்கை கடலோர பாதுகாப்புப் படைக்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் 12 அதிநவீன கண்காணிப்பு ட்ரோன்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது

கடல்சார் குற்றங்களைத் தடுக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
அவுஸ்ரேலியாவின் கடல்சார் எல்லைக் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் பிரட் சோன்டர், இந்த நவீன ட்ரோன்களை இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ரோஹன் ஜோசப் அவர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளார்
இந்த ட்ரோன்களின் வருகையால் கடல் பகுதியில் நடக்கும் மனிதக் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களை இனி வானில் இருந்தபடியே துல்லியமாகப் பிடிக்க முடியும் என்பதுடன் கடலில் மீனவர்களோ அல்லது கப்பல்களோ விபத்துக்குள்ளானால், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மிக விரைவாக முன்னெடுக்கலாம்.
ஏற்கனவே 2023 இல் 12 ட்ரோன்களை வழங்கிய அவுஸ்ரேலியா, தற்போது மீண்டும் உதவிக்கரம் நீட்டியுள்ளது. தொழில்நுட்ப உதவியுடன் மாத்திரமல்லாமல், இந்த ட்ரோன்களை இயக்குவதற்கான சிறப்புப் பயிற்சிகளையும் ஆஸ்திரேலிய எல்லைப்படை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது