மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு கரம் கொடுக்கும் அறக்கொடை முயற்சி!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாண தேசிய கல்வியியற் கல்லூரியின் முன்னைநாள் பீடாதிபதி தி. கமலநாதன் அவர்களாலும், அவரது நண்பர்களாலும் தீவகக் கல்வி வலயத்திற்குட்பட்ட இரு பாடசாலைகளின் மாணவர்களுக்குப் புத்தகப்பைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் அறக்கொடை நிதியத்தின் ஊடாக அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கும், இராஜலிங்கம் அறக்கொடை நிதியத்தின் ஊடாக காரைநகர் வேரப்பிட்டி ஸ்ரீ கணேசா வித்தியாலய மாணவர்களுக்கும் இவ்வுதவிகள் வழங்கப்பட்டன.

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஊக்கமளித்து, அவர்களின் கற்றல் தேவைகளை நிறைவேற்றுவதற்கு இவ்வாறான அறப்பணிகள் பெரிதும் துணைபுரிகின்றன.

சமூக அக்கறையுடன் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குக் கரம் கொடுத்த திரு தி. கமலநாதன் அவர்களுக்கும், அவரது நண்பர்களுக்கும், அறக்கொடை நிதியங்களின் பங்களிப்பாளர்களுக்கும் தீவகக் கல்வி வலயத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்

Share this Article