யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சினால் சுற்றுலா அபிவிருத்தி திட்டங்களுக்காக 130 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக யாழ் அரச அதிபர் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாண மாவட்ட சுற்றுலா தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்டத்தின் பாராளுமன்ற…
வடக்கில் சிறந்த நீச்சலுக்கான கடற்கரையாக பரிசீலிக்கப்படும் வேலணை சாட்டி கடற்கரை இப்பொழுது நாட்டின் பல பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த அடையாளமான கடற்கரையை, மக்கள் குவிந்து மகிழ்வதைத் திருப்தியுடன் அனுபவிக்கக் கூடிய உல்லாசப் பிரதேசமாக மாற்ற,…
யாழ் மாவட்டத்திலிருந்து குறைந்த அளவான விண்ணப்ப படிவங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்து, சனாதிபதி நிதியத்தின் மூலம் பொதுமக்கள் நன்மையடைய வேண்டும் என்பதே அதிமேதகு சனாதிபதி அவர்களின் நோக்கமாகும் எனவும், இது தொடர்பில்கிராம அலுவலர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு களை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்…
பண்டாரவளை பிரதான பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போக்குவரத்து சபை பேருந்தொன்று கடத்திச்செல்லப்பட்டு பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று (25/02) காலை அடையாளம் தெரியாத ஒருவரால் கடத்தப்பட்டு, தியதலாவ, வெலிஹெலகம பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
வேல்ட் விசன் நிறுவனத்தின் பிரதிநிதிகள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை நேற்றையதினம் (25.02) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில் "Together We Rise"எனும்…
யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் தூதுவர்கள் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மதிவதனியைச் சந்தித்து தற்போதைய நிலவரம் தொடர்பில் கேட்டறிந்துகொண்டனர். யாழ்ப்பாணம் மாநகர சபை அலுவலகத்தில் நேற்று (25/02) இடம்பெற்ற இச் சந்திப்பில் இரு நாட்டுத் தூதுவர்கள், மாநகர முதல்வர்,…
யாழ்ப்பாணம் - மண்டைதீவு பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.…
அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தத்தை எட்டுவதற்காக “தேவையான எதையும் செய்யத் தயாராக உள்ளோம்” என்று ஈரான் தெரிவித்துள்ளது. இந்த வார இறுதியில் இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள முக்கிய பேச்சுவார்த்தையை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் மாஜிட்…
2026 ஆம் ஆண்டிற்கான உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ளும் பணிகள் இன்று (25/02) முதல் ஆரம்பமாவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சார நுகர்வோருக்கு மார்ச் 18 ஆம் திகதி வரை…
அக்குரேகொட இரட்டைக் கொலை சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இரண்டாவது துப்பாக்கிதாரியும் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபர் ஊவாக மாகாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த பெப்பரவரி 13ஆம் திகதி, தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்குரேகொட…
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,552 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 13.7% வளர்ச்சியாகும் என அதன் தலைவர்…
யாழ். சுன்னாகம் பகுதியில் மீட்டர் வட்டி பிரச்சினையால் முச்சக்கர வண்டி ஒன்று கத்தி முனையில் பறிக்கப்பட்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை (24/02) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், மீட்டர் வட்டிக்கு பணத்தை வழங்கும் ஒருவர் மற்றைய ஒருவருக்கு மீட்டர் வட்டிக்கு பணத்தை…
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவினை முன்னிட்டு பணிபுரியவுள்ள நெடுந்தீவு அமைப்புக்களின் பணிக்குழுவினர் நெடுந்தாரகை படகு மூலம் கச்சதீவு சென்றுள்ளனர் இன்று (25/02) காலை 06:15 மணிக்கு நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து குழுவினர் பயணத்தை ஆரம்பித்தனர் நெடுந்தீவு பிரதேச செயலகம், பிரதேச சபை,…
வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள போசணையாளர் 05 மற்றும் சமூக உளநல உத்தியோகத்தர் 01 பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. வடக்கு மாகாண…
யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் 'கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?' என்ற தலைப்பிலான திறந்த கலந்துரையாடல் யாழ்.ஊடக அமையத்தின் மாநாட்டு மண்டபத்தில் இன்று (24/02) இடம்பெற்றது. ஊடக அமையத்தின் ஸ்தாபகர் இ.தயாபரன் தலைமையில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமான மேற்படி கலந்துரையாடலில், கிவுல்…
தொல்புரம் - பாணாவெட்டி வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வே.குருபரனின் இடமாற்றத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கமும் பிரதேசத்திலுள்ள பொது அமைப்புகளும் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று (24/02) செவ்வாய்க்கிழமை வைத்தியசாலைக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account