இஸ்ரேலின் ஹைஃபா எரிபொருள் நிலையங்கள் நிர்மூலம் – ஈரான் அறிவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

சர்வதேச செய்தி நிறுவனங்களால் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளைத் தொடர்ந்து, தற்போது ஈரானிய அரச ஊடகங்கள் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ள அதிர்ச்சியூட்டும் போர் நிலவரங்கள் சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சமூக வலைத்தளங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத வதந்திகளை முற்றாகத் தவிர்த்து, ஈரானிய இராணுவம் தனது 20-வது உத்தியோகபூர்வ அறிக்கையின் ஊடாக இஸ்ரேல் மீதான தனது பாரிய ட்ரோன் தாக்குதலை உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

ஈரானிய அரச மற்றும் இராணுவ ஊடகங்கள் வெளியிட்டுள்ள அந்த அதிரடி அறிக்கையின்படி, இஸ்ரேலின் முக்கிய வர்த்தக மற்றும் மூலோபாய நகரமான ஹைஃபாவில் அமைந்துள்ள பாரிய எண்ணெய் மற்றும் எரிவாயு சுத்திகரிப்பு நிலையங்கள், அத்துடன் எரிபொருள் சேமிப்புக் கிடங்குகள் மீது ஈரானிய வான்படையின் ட்ரோன்கள் வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. வெடிபொருட்களைச் சுமந்து சென்ற ஈரானியப் படையினரின் இந்த ட்ரோன்கள் இஸ்ரேலின் வான் பாதுகாப்பை மீறிப் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கான பிரதான காரணத்தையும் ஈரான் பகிரங்கப்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக ஈரானின் எண்ணெய் வளங்கள் மற்றும் எரிபொருள் கிடங்குகள் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்ட ஆக்கிரமிப்புத் தாக்குதல்களுக்கு நேரடிப் பதிலடியாகவே இந்த இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“எமது எண்ணெய்க் கிடங்குகள் மீது கைவைத்தால், உங்களது மூலோபாய வளங்களும் தப்பாது” என்ற ஈரானின் தீவிரமான பொருளாதாரப் போர் வியூகத்தையே இந்த ஹைஃபா மீதான தாக்குதல் மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

மேலும், ஈரானிய இராணுவத்தின் குறித்த அறிக்கையின் இறுதிப் பகுதியில் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் கடுமையான மரண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“அமெரிக்கக் குற்றவாளிகளுக்கும், குழந்தைகளைக் கொல்லும் சியோனிச (இஸ்ரேலிய) ஆட்சிக்கும் எதிரான எமது இந்தப் போர், உரிமைக்கான இறுதி வெற்றி கிடைக்கும் வரை ஒருபோதும் ஓயாது,” என ஈரானிய இராணுவம் திட்டவட்டமாகச் சூளுரைத்துள்ளது.

ஈரானின் இராணுவக் கட்டமைப்பை முழுமையாக அழித்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்தைப் பொய்யாக்கும் வகையிலும், மத்திய கிழக்கில் யுத்தம் மேலும் உக்கிரமடையவுள்ளதையே இந்த அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.

Share this Article