நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அ.த.க வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு- 2026 எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20/03) இடம்பெறவுள்ளது வித்தியாலய அதிபர் சி.சிவகுமார் தலைமையில் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை பி.ப 1.30 மணிக்கு இடம்பெறவுள்ள நிகழ்வின் பிரதம விருந்தினராக நெடுந்தீவு பிரதேச…
வாகனப் பதிவு எண்களின் கடைசி இலக்கத்தின்படி, ஒற்றை-இரட்டை எண் அடிப்படையில் நாளை (19/03) முதல் எரிபொருள் வழங்கப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அதன்படி, ஒற்றை மற்றும் இரட்டை எண்களின் அடிப்படையில் சுழற்சி முறையில் வாகனங்களுக்கான எரிபொருள் விற்பனை…
இலங்கையின் தெற்கிலுள்ள வீரவில பகுதியில் இன்று (18/03) இடம்பெற்ற இரு அரச பேரூந்து விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சுமார் 40 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றும்,…
உத்தியோகபூர்வ வாகன இலக்கத்தகடு பெறாத வாகன உரிமையாளர்கள் எரிபொருள் நிரப்பும்போது தங்கள் அடையாளத்தைச் சரிபார்ப்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதன்படி வருமான வரி உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ், காப்புறுதி அல்லது வாகனப் புகைப் பரிசோதனைச்…
"எமது இனத்தின் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது; உலகத்தரம் வாய்ந்த கல்வியோடும் கட்டுக்கோப்பான ஒழுக்கத்தோடும் நீங்கள் மிளிரும் போதே, திட்டமிடப்பட்ட அழிப்புக்களை முறியடித்து நாம் உலக அரங்கில் தலைநிமிர முடியும்" என அண்மையில் அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர்…
ஜனாதிபதி பங்குபெற்றும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதி ஆற்றிய உரையின் முக்கிய விபரங்கள் "எரிபொருளுக்காக நாம் நீண்டகால டெண்டர்களை வழங்கியிருந்தோம். எனினும், குறிப்பாக தலா 90,000 மெட்ரிக் தொன் கொண்ட இரு நீண்டகால டெண்டர் கப்பல்களை உரிய காலத்திற்குப் பெற்றுக்கொள்ள முடியாமல்…
ஈரான் முன்னெடுத்துள்ள புதிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு இராச்சியம், தனது வான்பரப்பை தற்காலிகமாக முழுமையாக மூடுவதாக அறிவித்துள்ளது. நாட்டின் வான்பரப்பை தற்காலிகமாகவும் முழுமையாகவும் மூடுவதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் பொது சிவில் விமான போக்குவரத்து அதிகார…
"கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் "சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமங்களை" அங்குரார்ப்பணம் செய்யும் தேசிய வேலைத் திட்டம் நேற்றையதினம் (16.03) நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவின் நெடுந்தீவு மேற்கு (J/01) கிராமத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது…
மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் பெரும்பாலான விமானங்கள் தொடர்ந்து தாமதங்களைச் சந்தித்து வருவதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் தொடரும் மோதல் காரணமாக, நேற்று சுமார் நான்கு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டதாக…
நெடுந்தீவு புனித யூதாததேயு ஆலய பெருவிழா எதிர்வரும் சனிக்கிழமை (21/03) இடம்பெறவுள்ளது. பங்குத்தந்தை அருட்பணி ப.பத்திநாதன் அடிகளாரின் ஒழுங்குபடுத்தலில் எதிர்வரும் வியாழன் (19.03) மாலை 04:30 மணிக்கு திருச்செபமாலையும் புனிதரின் கொடியேற்றமும் தொடர்ந்து திருப்பலியும் இடம்பெறும். தொடர்ந்து வெள்ளிக்கிழமை (20.03) மாலை…
வைத்தியர்களின் தேவைக்கு ஏற்ப எதிர்காலத்தில் எரிபொருளை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். சேவைத் தேவையின் அடிப்படையில் வழங்கப்படும் எரிபொருள் அளவைக் குறிப்பிடும் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். "QR…
தரமற்ற நிலக்கரி பயன்பாட்டினால் ஏற்பட்டுள்ள மின் உற்பத்தி இழப்பை ஈடுசெய்ய, மின்சாரக் கட்டணத்தை அதிகரித்து அந்தச் சுமையை மக்கள் மீது சுமத்த அரசு முயற்சித்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சாடியுள்ளார். நேற்று (16/03) ஊடகங்களுக்கு விடுத்த விசேட…
சினிமா உலகில் தலைசிறந்த விருதாக கருதப்படும் ஒஸ்கார் விருதுகள் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் உலகப்புகழ்பெற்ற திரைப்பட விருது விழாவாகும். திரைத்துறையில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கும் கலைஞர்கள் மற்றும் படங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதினை பெறுவது…
நாடு முழுவதும் எரிபொருள் வழங்குவதற்கான தேசிய எரிபொருள் அங்கீகார முறைமை (QR) குறியீட்டு முறையை அரசாங்கம் நேற்று (15/03) முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தியுள்ளது. இருப்பினும், விவசாய நோக்கங்களுக்காக விவசாயிகளுக்கு ஒதுக்கீட்டிற்கு வெளியே எரிபொருளை வழங்க விவசாய மேம்பாட்டுத் துறை முடிவு செய்துள்ளது.…
யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையிலான நேற்று (15.03) மாவட்ட செயலகத்தில் இரவு 8.00மணிக்கு நடைபெற்றது.…
இருபாலை கிழக்கு முதியோர் சங்க உறுப்பினர்களுக்கான தேனீர் விருந்துபசார ஒன்று கூடல் பிரதேசசபை உறுப்பினர் நடேசபிள்ளை கஜேந்திரகுமார் அவர்களின் ஏற்பாட்டில், கடந்த சனிக்கிழமை (14/03) அன்னை இந்திரா சனசமூக நிலையத்தில் நடைபெற்றது. முதியோர் சங்கத் தலைவரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராம…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account