மன்னார் மறைமாவட்ட ஆயருடன் – நாடாளுமன்ற உறுப்பினர் சந்திப்பு.

மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர், இன்றைய தினம் (14/03) மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய பேரருட்கலாநிதி ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை ஆண்டகையைச்…

SUB EDITOR SUB EDITOR

பதிலடியை தொடங்கியுள்ள ஈரான்!!!

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் ஏவுகணைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அந்த ஏவுகணை, பாக்தாத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள கடுமையாக பாதுகாக்கப்படும் Green Zone பகுதியிலுள்ள தூதரக வளாகத்தின் எல்லைக்குள் விழுந்ததாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு ஈராக்…

SUB EDITOR SUB EDITOR

3–5 வயது குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் வேண்டாம்!!

3 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு Zoom அல்லது பிற ஆன்லைன் தளங்கள் மூலம் கற்பிப்பது குழந்தை வளர்ச்சி மற்றும் கல்வி உளவியல் கொள்கைகளுக்கு முரணானது என மகளிர் மற்றும் குழந்தைகள் அலுவல்கள் அமைச்சகம் எச்சரித்துள்ளது. இவ்வயதில் குழந்தைகள் செயற்பாடுகள் மற்றும்…

SUB EDITOR SUB EDITOR

‘பொன் அணிகளின் போர்’ சமநிலையில் நிறைவு!

'பொன் அணிகளின் போர்' என வர்ணிக்கப்படும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் இடையிலான 109-வது பெருஞ்சமர் சமநிலையில் நிறைவடைந்தது. இத்துடுப்பாட்டப் போட்டி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் கடந்த 12-ஆம் திகதி ஆரம்பமானது. போட்டியின் முதல் நாள்…

SUB EDITOR SUB EDITOR

எரிபொருள் விநியோகம் தொடரும் – லங்கா ஐஓசி !

இலங்கையின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதாகவும் லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த அந்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கே. ரகு இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்துத்…

SUB EDITOR SUB EDITOR

வேலணை பிரதேச மட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் !!

வேலணை பிரதேச மட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் தலைமையில் வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்  நேற்றையதினம் (13.03) நடைபெற்றது. இதன்போது வேலணை பிரதேச செயலக பிரிவில் ஏனைய திணைக்களங்களினால்…

SUB EDITOR SUB EDITOR

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட அறிவிப்பு

புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்ப நலன்புரி நடவடிக்கைகளுக்காக இந்த ஆண்டின் முதல் 2 மாத காலப்பகுதியில் 5,938 பயனாளிகளுக்கு 962 இலட்சம் ரூபா பணத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செலவிட்டுள்ளதாக அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகப் புறப்படுவதற்கு முன்னர் பணியகத்தில்…

SUB EDITOR SUB EDITOR

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

அண்மைய நாட்களில் நாட்டில் நிலவி வரும் கடுமையான வெப்பநிலை ஒட்டுமொத்த மக்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேராதனை போதனா வைத்தியசாலையின் மருத்துவ நிபுணர் பேராசிரியர் உதய ரலபனாவ இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். பாடசாலை பிள்ளைகள்…

SUB EDITOR SUB EDITOR

ரஷ்ய எரிபொருளை நாடும் அரசாங்கம் !

அவசர எரிபொருள் கொள்வனவு குறித்து அரசாங்கம் ரஷ்யாவுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில் வெள்ளிக்கிழமை (13/03) அமைச்சில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள…

SUB EDITOR SUB EDITOR

சிறையில் அழுது புலம்பிய சுரேஷ் சலே!!

 தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதான துவான் சுரேஷ் சலே சிறைச்சாலையில் அழுது புலம்பியதாக முன்னாள் அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். சுரேஷ் சலேவை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். தனது தாத்தாவும் தந்தையும் ராணுவ வீரர்கள்…

SUB EDITOR SUB EDITOR

“டித்வா” புயலினால் பாதிக்கப்பட்ட சுயதொழில் முயற்சியாளருக்கு இழப்பீடு!!

"டித்வா" புயலினால் பாதிக்கப்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கு இழப்பீட்டு காசோலைவழங்கும் நிகழ்வு இன்றையதினம் (13/03) வேலணைப் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கு இழப்பீட்டு காசோலைகளை பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி றஜீவன் வழங்கி வைத்தார் டித்வா புயலினால் ஏற்பட்ட சேதங்களால் பாதிக்கப்பட்ட…

SUB EDITOR SUB EDITOR

யாழ் மாவட்ட போக்குவரத்து உப குழுக் கூட்டம் எம்.பி க.இளங்குமரன் தலைமையில்!

யாழ் மாவட்ட போக்குவரத்து உப குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான க.இளங்குமரன் தலைமையில் இன்றையதினம் (13.03) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது பாரிய நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட வீதி அபிவிருத்தித்…

SUB EDITOR SUB EDITOR

செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20ல் ஆரம்பம்

செம்மணி மனிதப் புதைகுழியில் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதியன்று மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள செம்மணி மனித புதைகுழி அகழ்வு பகுதியை நேற்று வியாழக்கிழமை (12/03) மாலை யாழ்ப்பாணம் நீதிவான் உள்ளிட்ட…

SUB EDITOR SUB EDITOR

தாதியர் சேவைப் பயிற்சிக்கு புதியவர்கள் இணைப்பு

இலங்கையின் சுகாதாரத் துறையில் நிலவும் மனித வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, பொதுமக்களுக்கு தரமான சுகாதார சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில், 2,918 புதிய மாணவ தாதியர்களைப் பயிற்சிக்காக இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் இந்த வேலைத்திட்டத்தின்…

SUB EDITOR SUB EDITOR

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் படுகாயம்!

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணித்த முச்சக்கர வண்டியும், கார் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் சுற்றுலாப் பயணிகள் இருவரும், முச்சக்கர வண்டிச் சாரதியும் படு காயமடைந்துள்ளனர். இந்த விபத்து வேலணை மண்கும்பான் பகுதியில் நேற்று (12/03) இடம்பெற்றுள்ளது.பிரான்ஸ் நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்…

SUB EDITOR SUB EDITOR

மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரனுக்கு ஜனாதிபதி நியமனம்

புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனத்திற்கான உத்தியோகபூர்வ கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை (13/03) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் எஸ். சதீஸ்தரனுக்கு வழங்கினார். நீதித்துறை சேவையில் விசேட தர அதிகாரியாக பணியாற்றியுள்ள எஸ்.…

SUB EDITOR SUB EDITOR