இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால நம்பிக்கையாகப் பார்க்கப்படும் இளம் வீரர்களில் ஒருவரான விக்னேஷ்வரன் ஆகாஷ் தற்போது இலங்கை ‘ஏ’ அணியில் இடம்பிடித்து ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

யாழ்.மண்ணிலிருந்து உருவான ஒரு வீரர் தேசிய மட்டத்திலான ‘ஏ’ அணித் தொடரில் விளையாடத் தேர்வாகியிருப்பது ஒட்டுமொத்த வடக்கு மாகாண கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடின உழைப்பும், தளராத விடாமுயற்சியும் கொண்ட ஆகாஷ் இந்தத் தொடரின் ஊடாகத் தனது திறமையை நிரூபித்து மிக விரைவில் இலங்கைத் தேசிய அணியின் நீல நிறச் சீருடையை அணிவாரென எதிர்பார்க்கப்படுகிறது.