நாட்டில் இரு வேறு இடங்களில் பொலிஸார் சுற்றிவளைப்பில் ஈடுபட்டபோது, இலங்கையில் முறையான விசா இன்றி தங்கியிருந்த குற்றச்சாட்டின் கீழ் 17 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளன கடந்த வியாழக்கிழமை (14/05) பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால்…
அவிசாவளை மற்றும் மாத்தளை ஆகிய இரண்டு பொலிஸ் பிரிவுகளில், வியாழக்கிழமை (14/5) கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அவிசாவளை பஸ் நிலையத்துக்கு அருகில் நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு,…
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு இரண்டாம் கட்ட ஒருங்கிணைப்பு கலந்துரையாடல் வியாழக்கிழமை (14/05) ஆலய வளாகத்தில் நடைபெற்றது. கலந்துரையாடலுக்கு முன்னதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர், காவல்துறையினர், பிரதேச சபையினர், அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மற்றும் ஆலய பரிபாலன…
குமுதினி படுகொலையின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் (15/05) ) காலைமுதல் நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. காலை 9.00 மணிக்கு மாவிலித்துறைமுகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி வளாகத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. முதன்மை நினைவுச் சுடரினை 06 மாத…
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று புதன்கிழமை (13/05) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்போது, சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ராகமை - பொடிவீகும்புர பகுதியில், வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவினரால்…
உரிமையாளர் எவருமற்ற சொத்து என கூறப்படும் மல்வானையில் அமைந்துள்ள காணி மற்றும் வீட்டை, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கையளிக்குமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (14/05) குறித்த வீட்டை சுற்றிவளைத்து போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு…
யாழ் நகரில் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மலசலகூட தொகுதியை நிர்வகிப்பதில் இ.போ.ச மற்றும் மாநகரசபை இடையே ஏற்பட்டுள்ள இழுபறி நிலையை அடுத்து அதற்கான தீர்வைக் காண சட்ட ஆலோசனை பெற மாநகரசபை தீர்மானித்துள்ளது. இன்று (14/05) நடைபெற்ற…
தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்த இலங்கையர் உட்பட மூன்று வௌிநாட்டு பிரஜைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை, கனடா மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளில் குடியுமை பெற்ற மூவரே இவ்வாறு தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்துள்ளதாக…
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் கட்டுப்பாட்டாளர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். மென்பொருள் ஒன்றை நிறுவும் போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் இன்று ( 14/05) கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின்…
தேயிலைத் துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களை விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபை அறிவித்துள்ளது. விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம், விவசாய…
யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை என பெற்றோர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த யுவதி கடந்த 27 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா செல்வதாக சென்ற நிலையிலேயே காணாமல் போயுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ்…
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சஞ்சீவ குமார சமரரத்ன என்ற ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்பவரின் கொலைக்கு உடந்தையாக இருந்ததற்காகவும், அதற்காக துப்பாக்கிகளை வழங்கியதற்காகவும், ஒஸ்மொண்ட் குணசேகர என்ற ‘கம்பஹா ஒஸ்மொண்ட்’ என்ற நபர் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2025 பெப்ரவரி 19…
நெடுந்தீவை குமுறவைத்த குமுதினி படுகொலையின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15/05) நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்படவுள்ளது. அன்றையதினம் (15/05) காலை 8.30 மணிக்கு நெடுந்தீவு மாவிலித்துறை வீரபத்திரப்பிள்ளையார் ஆலயம், நெடுந்தீவு மாவிலித்துறை சவேரியார் ஆலயம், நெடுந்தீவு தென்னிந்திய…
ஊர்காவற்றுறை பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களான ஊர்காவற்றுறை ,அனலைதீவு, எழுவைதீவு ஆகிய இடங்களில் பல ஏக்கர் கணக்கான காணிகள் மற்றும் பல வீடுகள் பராமரிப்பு அற்று கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இதனால் இப் பிரதேசத்தில் வாழும் மக்கள் பல்வேறுப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இவ்வாறு…
வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று (12/05) முற்பகல் 11.50 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார். 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்களைக் கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க…
தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் இன்று (12/05) நீர்கொழும்பு நீதவான் சுபாணி…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account