அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசின் கடும் நடவடிக்கைகளால் 2025 ஆம் ஆண்டு இலங்கை அரசியல் வரலாற்றில் முக்கியமான, மறக்க முடியாத ஆண்டாகப் பதியப்பட்டுள்ளது. இதுவரை காணாத வகையில் முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட பல முக்கிய அரசியல், நிர்வாக மற்றும் உயர்…
ஈழத்து ஓவியக் கலையின் முகவரி, தன்னிகரற்ற சிற்பி, கலைப் பாதையில் பலரை வழிநடத்திய மாபெரும் ஆசான் திருவாளர் வைத்தீஸ்வரன் சிவசுப்பிரமணியம் (ஓவியர் ரமணி) அவர்கள் இன்று (29/12) இறைவனடி சேர்ந்துவிட்டார் அவரது கைவண்ணத்தில் உருவான சிலைகள் வெறும் கற்சிலைகள் அல்ல அவை…
நெடுந்தீவு மறைக்கல்வி மாணவர்களின் ஒளிவிழா நேற்றைய தினம் (28/12) தேவா கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது நெடுந்தீவு பங்குத்தந்தை ப.பத்திநாதன் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நெடுந்தீவு மறைப் பாடசாலை மாணவர்களது கலை நிகழ்வுகளுடன் எளிமையான முறையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நெடுந்தீவு பிரதேச செயலக உத்தியோகத்தர் நலம்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் (29/12) ஒளிவிழா செயலக மண்டபத்தில் இடம்பெற்றது நெடுந்தீவு பங்குத்தந்தை ப.பத்திநான் அடிகளாரால் ஒளிவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. இவ் வழிபாட்டு நிகழ்வில் பிரதேச செயலாளர், பிரதேச சபையின் செயலாளர், பதவிநிலை…
நெடுந்தீவு கிழக்கு சன சமுக நிலையத்தின் வாழ்விற்கான பேரொளி "வாசிப்பு” எனும் தொனிப்பொருளிலான அமர்வு-17 நிகழ்வு இன்று (29/12) திங்கட்கிழமை காலை நிலைய மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது. வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளில் இரகுபதி நினைவு நூலகத்தில் அங்கத்தவராகியுள்ள மற்றும்…
அண்மையில் ஏற்பட்ட "டித்வா" புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டி சேவைச்சங்கம் இன்றையதினம் (29.12), அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இலங்கை வங்கி கணக்கிற்கு ரூபா 500,000.00 நிதியினை வைப்பிலிட்டு, அதற்கான பற்றுச்சீட்டின் பிரதியினை யாழ்…
2009 ஆம் ஆண்டில் களுத்துறை சிறைச்சாலையில் கைதிகள் சிலர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு விசாரணைகளின்…
'டித்வா' புயலினால் சேதமடைந்த நெல் மற்றும் ஏனைய பயிர்களுக்கான மானியங்கள் மற்றும் இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் விவசாயத் திணைக்களம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. தற்போது வரை 66,965 நெல் விவசாயிகளுக்கும் ஏனைய பயிர்ச் செய்கைகளுடன் தொடர்புடைய 16,869 விவசாயிகளுக்கும் மானியங்கள் மற்றும்…
முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியைச்சேர்ந்த குகநேசன் டினோஜா என்னும் சிறுமி அண்மையில் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்திருந்தார். இந்நிலையில் இவ்வாறு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி இன்று (29/12) முல்லைத்தீவு மாவட்ட…
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில், 2026 ஜனவரி முதலாம் திகதி முதல் மரணச் சடங்குகளின் போது வீடுகளில் பட்டாசு கொழுத்துவது முற்றாகத் தடை செய்யப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையின் இவ்வாண்டுக்கான இறுதி சபை அமர்வு கடந்த சனிக்கிழமை…
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார். இன்று (28/12) அதிகாலை குறித்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.…
யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். ச. ஸ்ரீ பவானந்தராஜா அவர்கள் கடந்த வாரம் நயினாதீவு பிரதேச வைத்தியசாலைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டார். தீவகப் பகுதி மக்களின் சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த வைத்தியசாலையின் தற்போதைய…
கண்டன அறிக்கை தையிட்டி போராட்டத்தில் வேலன் சுவாமிகள் தாக்கப்பட்டதையும் கைது செய்யப்பட்டதையும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் ஆகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தமிழர்கள் அடக்கப்பட்டு ஒடுக்கப்படுவதையும், தமிழர் தாயக பிரதேசம் ஆக்கிரமிக்கப்பட்டு பௌத்தமயமாக்கப்படுதலையும் இந்நாட்டு பிரஜைகளுக்கும்,…
யாழில் நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த பெண் உட்பட நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். பெண் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடனும், இருவர் போதை மாத்திரைகளுடனும், ஒருவர் மாவா போதைப்பொருளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பதிவு செய்யப்பட்ட 08 கலை இலக்கிய மன்றங்களுக்கான ஆற்றுகைப்பொருட்களும் பதிவு செய்யப்பட்ட…
உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டங்கள் தோற்கடிக்கப்படுவதன் மூலம் அரசாங்கத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு தோற்கடிக்கப்படுவது திசைகாட்டியின் வரவு செலவுத் திட்டம் அல்ல, மக்களின் வரவு செலவுத் திட்டமே என அவர்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account