2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (24.03) முதல் ஏப்ரல் 24 வரை இணையவழி ஊடாகக் கோரப்படுவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் அனைவரும் www.doenets.lk மற்றும் www.onlineexams.gov.lk/eic ஆகிய உத்தியோகபூர்வ இணையதளங்களுக்குச் சென்று வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றி சரியான முறையில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலை மாணவர்கள் தமது பாடசாலை அதிபர் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும். தனியார் விண்ணப்பதாரர்கள் தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தித் தனிப்பட்ட முறையில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.